இன்று முதல் இந்த போன்களில் வாட்ஸ் ஆப் இயங்காது!

விளம்பரம்
Written by Tasneem Akolawala மேம்படுத்தப்பட்டது: 31 டிசம்பர் 2018 17:17 IST

வாட்ஸ் ஆப் நிறுவனம் தனது சேவையை சில வகை போன்களில் நிறுத்தவுள்ளது.

வாட்ஸ் ஆப் செயலி தனது சேவையை இந்த ஆண்டின் இறுதிக்குள் சில வகை போன்களில் தனது சேவையை நிறுத்திக்கொள்ளப் போவதாக தகவல் வெளியான நிலையில், வரும் டிசம்பர் 31 ஆம் தேதி ஆன இன்று முதல் முற்றிலுமாக தனது சேவையை சில வகை போன்களில் நிறுத்தவுள்ளது.
அதன்படி பிளாக்பெரி 10, பிளாக்பெரி ஓ.எஸ், நோக்கியா சிம்பியன் எஸ் 60, வின்டோஸ் 8.0, நோக்கியா எஸ் 40, ஆண்டிராய்டு வெர்ஷன் 2,3,7 மற்றும் பழைய ஐ போன் ஐ.ஓ.எஸ் 7 வகை மாடல்களிலும் வாட்ஸ் ஆப் இயங்காது. 

சரியாக வரும் 2020 முதல் இதுபோன்ற மற்ற சில போன்களிலும் இயங்குது என்பது கூடுதல் தகவல். ஏற்கனவே இதுபோன்ற சில முக்கிய பழைய தளங்களில் வாட்ஸ் ஆப்பின் செயல்பாடு குறையவே வரும் காலத்தில் அவர்கள் அதன் இயக்கத்தை முற்றிலுமாக நிறுத்தி விடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படி நிறுத்தப்படபோகும் நோக்கியா வகைகளின் இடம்பெற்ற நோக்கியா 40 வகை போன்கள் அக்காலக்கட்டத்தின் மிகவும் பிரபலமான போன் வகைகளில் ஒன்று. இந்த எஸ் 40 வகை செயலி நோக்கியா ஆஷா, நோக்கிய 206, நோக்கியா 515 போன்ற போன்களில் வெளியாகி சந்தைகளில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்றுக்கொண்டது.

2018 ஜூன் மாதம் வரை மட்டுமே வாட்ஸ் ஆப்பை பயன்படுத்த முடியும் என்ற நிலையில் டிசம்பர் வரை அதை நீட்டித்துக்கொண்டது  நோக்கியா போன்களை பயன்படுத்தும் பலருக்கு உதவியது. மேலும் வரும் ப்பிரவரி 2020 ஆம் ஆண்டு முதல் 3ஜி எஸ் வகை போன்களில் வாட்ஸ் ஆப் தனது செயல்பாட்டை நிறுத்திவிடும்.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Nokia, WhatsApp, Nokia S40
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ஜான் டெர்னஸ் தலைமையில் ஆப்பிளின் ஃபோல்டபிள் ஐபேட், AI சாதனங்கள் மற்றும் டச்ஸ்கிரீன் மேக்புக் அறிமுகத் திட்டம்
  2. விவோ X500 ப்ரோ மேக்ஸ்: 200MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ மற்றும் 50MP LOFIC கேமராவுடன் அறிமுகமாக வாய்ப்பு
  3. அறிமுகத்திற்கு முன் கீக்பெஞ்சில் ஷாவோமி 17T: டைமென்சிட்டி 8500 சிப் மற்றும் 12GB RAM விவரங்கள் கசிந்தன
  4. விவோ X போல்ட் 6-ல் 200MP கேமரா மற்றும் பெரிய பேட்டரி; ஷாவோமி மிக்ஸ் போல்ட் 6 வெளியீட்டுத் தகவல் கசிந்தது
  5. போக்கோ C81x 4G vs லாவா போல்ட் N2 ப்ரோ vs ஐடெல் ஜீனோ 100: இந்தியாவில் விலை மற்றும் சிறப்பம்சங்கள் ஒப்பீடு
  6. உங்கள் ஆண்ட்ராய்டு போனில் அட்வான்ஸ்டு ப்ரொடெக்ஷனை எவ்வாறு இயக்குவது: ஒரு படிப்படியான வழிகாட்டி
  7. ரெட்மி A7 ப்ரோ 4G vs விவோ Y05 4G vs ரியல்மி P4 லைட் 4G: இந்தியாவில் விலை மற்றும் சிறப்பம்சங்கள் முழு ஒப்பீடு
  8. உங்கள் சாம்சங் போன் சீராக இயங்க அதனைத் தானாகவே மறுதொடக்கம் (Restart) செய்வது எப்படி?
  9. ஆண்ட்ராய்டின் நோட்டிஃபிகேஷன் பபிள்ஸ் அம்சத்திற்கான ஆதரவை வழங்கும் பணியில் வாட்ஸ்அப் ஈடுபட்டுள்ளது
  10. ஜியோ யூத் அண்ட் கேமிங் பிளான்: ஸ்னாப்சாட்+, ஃபேன்-கோடு மற்றும் ஜெமினி ப்ரோ அறிமுகம்: விலை, நன்மைகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.