Vivo Z1x இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது, இது விவோ நிறுவனத்தின் இந்தியா வரிசையில் இரண்டாவது Z-தொடர் ஸ்மார்ட்போன் ஆகும். விவோ அறிமுகத்திற்கு முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை டீசர் மூலம் வெளியிட்டு வருகிறது, அதனால் Vivo Z1x பற்றி அதன் வடிவமைப்பிலிருந்து பல சிறப்பம்சங்கள் வரை நமக்கு ஏற்கனவே பல தகவல்கள் தெரியவந்துள்ளன. Vivo Z1x ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சங்கள் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா சென்சார், 4,500mAh பேட்டரி ஆகியவற்றுடன் மூன்று பின்புற கேமரா அமைப்பை கொண்டுள்ளது. Vivo Z1x வெளியீட்டு நேரம், நேரடி ஒளிபரப்பு விவரங்கள், எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் பலவற்றைப் பற்றிய தகவல்களை கீழே பெறுங்கள்.
Vivo Z1x அறிமுகம்: நேரடி ஒளிபரப்பு நேரம், இந்தியாவில் எதிர்பார்க்கப்படும் விலை!
Vivo Z1x செப்டம்பர் 6 வெள்ளிக்கிழமை மதியம் 12 மணிக்கு அறிமுகமாகவுள்ளது. இந்த அறிமுக நிகழ்வில் நேரலை விவோ நிறுவனத்தின் பேஸ்புக் பக்கத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படும். Vivo Z1x அறிமுகத்திலிருந்து வெளிவரும் அனைத்து விவரங்களை தெரிந்துகொள்ள கேஜெட்ஸ்360-உடன் இணைந்திருங்கள். இப்போதைக்கு, இந்தியாவில் Vivo Z1x ஸ்மார்ட்போனின் விலை குறித்த உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும் இதுவரை வெளிப்படுத்தப்பட்ட சிறப்பம்சங்களை பார்க்கும்போது, ஸ்மார்ட்போனின் விலை 20,000 ரூபாய் அருகில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது உண்மையில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட விவோ Z5 ஸ்மார்ட்போனின் மாற்றியமைக்கப்பட்ட மாடலாக இருந்தால், Vivo Z1x இதேபோன்ற விலையை எதிர்பார்க்கலாம் - 1,598 யுவான்கள் (தோராயமாக 16,000 ரூபாய்). இந்த Vivo Z1x ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட்டுக்கு பிரத்யேகமாக இருக்கும் என்பதை ஏற்கனவே விவோ நிறுவனம் உறுதி செய்திருந்தது.
Vivo Z1x சிறப்பம்சங்கள்!
Vivo Z1x ஸ்மார்ட்போன் பற்றி இதுவரை வெளியான டீசர்களில், இந்த ஸ்மார்ட்போன் ஒரு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே (6.38-இன்ச் திரை என்று எதிர்பார்க்கப்படுகிறது) ஒரு வாட்டர் டிராப் நாட்ச், ஸ்னாப்டிராகன் 712 SoC ப்ராசஸர், 22.5W ஃப்ளாஷ் சார்ஜ் தொழில்நுட்பத்துடன் 4,500mAh பேட்டரி, மூன்று பின்புற கேமரா அமைப்பு (48 மெகாபிக்சல் சோனி IMX582 சென்சார் + 8 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா + 2 மெகாபிக்சல் டெப்த் கேமரா), 32 மெகாபிக்சல் முன்புற கேமரா மற்றும் இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரின்ட் சென்சார் ஆகிய சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. இதுவரை, இந்த ஸ்மார்ட்போன் பற்றி வெளியான சிறப்பம்சங்கள் விவோ Z5 உடன் பொருந்துவதாகத் தெரிகிறது. Vivo Z1x பற்றிய முழு சிறப்பம்சங்கள் இன்னும் சில மணி நேரத்தில் அறிமுக நிகழ்ச்சியில் வெளியிடப்படவுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்