Vivo Z1 Pro-வின் இரண்டு வகைகளிலும் ரூ. 1,000 விலைக் குறைப்பை பெறும்.
Vivo Christmas Carnival டிசம்பர் 20-ஆம் தேதியுடன் (இன்று) முடிவடைகிறது
Vivo Z1 Pro, Vivo Z1x மற்றும் பல போன்களில் தள்ளுபடியை வழங்கும் கிறிஸ்துமஸ் கார்னிவல் விற்பனையை (Christmas Carnival sale) விவோ நடத்துகிறது. இந்த விற்பனை இன்றுடன் முடிவடையும், அதாவது டிசம்பர் 20. மேலும், இது பல விவோ ஸ்மார்ட்போன்களில் விலை குறைப்பு மற்றும் தள்ளுபடியை வழங்குகிறது. கிரெடிட் கார்டு EMI பரிவர்த்தனைகளில் 5 சதவிகித கேஷ்பேக்கை வழங்க விவோ HDFC வங்கி மற்றும் ICICI வங்கியுடன் கூட்டு சேர்ந்துள்ளது. இந்நிறுவனம், கிரெடிட் கார்டுகளிலும், பஜாஜ் பின்சர்வ் வழியாகவும் no-cost EMI ஆப்ஷனை வழங்குகிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட போன்களை வாங்கினால் இலவச செல்பி ஸ்டிக் உறுதி.
Vivo Z1 Pro-வில் தொடங்கி, போனின் 4GB RAM + 64GB ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ. 12,990-யாக பட்டியலிடப்படுள்ளது. அதன் 6GB RAM + 64GB ஸ்டோரேஜ் மாடல் ரூ. 13,990-யாக உள்ளது. இந்த விற்பனை காலத்தில், இரண்டு வகைகளிலும் ரூ. 1,000 விலைக் குறைப்பை பெறும். அதன் top-end 6GB RAM + 128GB sஸ்டோரேஜ் ஆப்ஷன் விலைக் குறைப்புடன் ரூ. 15,990-யாக பட்டியலிடப்படுள்ளது. எக்ஸ்சேஞ் தள்ளுபடியும் Vivo தனது இணையதளத்தில் பட்டியலிட்டுள்ளது.
Vivo Z1x-ன் 6GB RAM + 64GB ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ. 15,990-யாக பட்டியலிடப்படுள்ளது. அதேசமயம் அதன் higher-end 6GB RAM + 128GB ஸ்டோரேஜ் மாடல் ரூ. 17,990 விலைக் குறியைக் கொண்டுள்ளது. மீண்டும், Christmas Carnival-க்கு ரூ. 1,000 தள்ளுபடியை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த போன் Fusion Blue மற்றும் Phantom Purple வண்ண விருப்பங்களில் வருகிறது. Vivo Y90, ரூ. 500 விலைக் குறைப்பை பெறுகிறது. மேலும், ரூ. 6,490-க்கு விற்பனை செய்யப்படுகிறது. Vivo Y15 (2019) ரூ. 2,000 தள்ளுபடியுடன் ரூ. 11,990-யாக பட்டியலிடப்பட்டுள்ளது.
Vivo U10-ல் விலைக் குறைப்பு எதுவும் இல்லை. ஆனால், விவோ, ப்ரீபெய்ட் ஆர்டர்களில் ரூ. 1,000 உடனடி தள்ளுபடியை வழங்குகிறது. பயனர்கள் பெற விரும்பும் எக்ஸ்சேஞ் தள்ளுபடியும் உள்ளது. இதேபோல், Vivo U20-யும் விலைக் குறைப்பை காணவில்லை. ஆனால், வாங்கும் போது இலவச செல்பி ஸ்டிக்கையும், அதோடு ரூ. 6,000 மதிப்புள்ள ஜியோ பலன்கள் மற்றும் எக்ஸ்சேஞ் தள்ளுபடி ஆப்ஷனையும் வழங்குகிறது. சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Vivo V17, ரூ. 12,000 மதிப்புள்ள ஜியோ சலுகைகள், 12 மாதங்கள் வரை no-cost EMI, வங்கி கேஷ்பேக் சலுகைகள் மற்றும் எக்ஸ்சேஞ் தள்ளுபடி ஆப்ஷன்களுடன் பட்டியலிடப்படுள்ளது. விற்பனை பக்கத்தின் முடிவில் Spin மற்றும் Win CC எனப்படும் ஒரு விளையாட்டு உள்ளது. இந்த விளையாட்டு, ரூ. 1,000 கூப்பன்களுடன் இயர்போன்களை வெல்ல அனுமதிக்கிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
This Strange New Crystal Could Power the Next Leap in Quantum Computing
The Most Exciting Exoplanet Discoveries of 2025: Know the Strange Worlds Scientists Have Found
Chainsaw Man Hindi OTT Release: When and Where to Watch Popular Anime for Free
Athibheekara Kaamukan Is Streaming Online: All You Need to Know About the Malayali Romance Drama