Vivo Z1x இன்று இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பம்சங்கள் என்ன?

இந்தியாவில் Vivo Z1x ஸ்மார்ட்போனின் விலை Vivo Z5 விலைக்கு ஒத்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Vivo Z1x இன்று இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பம்சங்கள் என்ன?

Vivo Z1x சூப்பர் AMOLED டிஸ்ப்ளே மற்றும் மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.

ஹைலைட்ஸ்
  • Vivo Z1x ஸ்மார்ட்போன் 4,500mAh பேட்டரியை கொண்டுள்ளது
  • இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் பிரத்யேகமாக இருக்கும்
  • Vivo Z1x, விவோ Z5-ன் மாற்றியமைக்கப்பட்ட மாடலாக இருக்கலாம்
விளம்பரம்

Vivo Z1x இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது, இது விவோ நிறுவனத்தின் இந்தியா வரிசையில் இரண்டாவது Z-தொடர் ஸ்மார்ட்போன் ஆகும். விவோ அறிமுகத்திற்கு முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை டீசர் மூலம் வெளியிட்டு வருகிறது, அதனால் Vivo Z1x பற்றி அதன் வடிவமைப்பிலிருந்து பல சிறப்பம்சங்கள் வரை நமக்கு ஏற்கனவே பல தகவல்கள் தெரியவந்துள்ளன. Vivo Z1x ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சங்கள் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா சென்சார், 4,500mAh பேட்டரி ஆகியவற்றுடன் மூன்று பின்புற கேமரா அமைப்பை கொண்டுள்ளது. Vivo Z1x வெளியீட்டு நேரம், நேரடி ஒளிபரப்பு விவரங்கள், எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் பலவற்றைப் பற்றிய தகவல்களை கீழே பெறுங்கள்.

Vivo Z1x அறிமுகம்: நேரடி ஒளிபரப்பு நேரம், இந்தியாவில் எதிர்பார்க்கப்படும் விலை!

Vivo Z1x செப்டம்பர் 6 வெள்ளிக்கிழமை மதியம் 12 மணிக்கு அறிமுகமாகவுள்ளது. இந்த அறிமுக நிகழ்வில் நேரலை விவோ நிறுவனத்தின் பேஸ்புக் பக்கத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படும். Vivo Z1x அறிமுகத்திலிருந்து வெளிவரும் அனைத்து விவரங்களை தெரிந்துகொள்ள கேஜெட்ஸ்360-உடன் இணைந்திருங்கள். இப்போதைக்கு, இந்தியாவில் Vivo Z1x ஸ்மார்ட்போனின் விலை குறித்த உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும் இதுவரை வெளிப்படுத்தப்பட்ட சிறப்பம்சங்களை பார்க்கும்போது, ​​ஸ்மார்ட்போனின் விலை 20,000 ரூபாய் அருகில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது உண்மையில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட விவோ Z5 ஸ்மார்ட்போனின் மாற்றியமைக்கப்பட்ட மாடலாக இருந்தால், Vivo Z1x இதேபோன்ற விலையை எதிர்பார்க்கலாம் - 1,598 யுவான்கள் (தோராயமாக 16,000 ரூபாய்). இந்த Vivo Z1x ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட்டுக்கு பிரத்யேகமாக இருக்கும் என்பதை ஏற்கனவே விவோ நிறுவனம் உறுதி செய்திருந்தது.

Vivo Z1x சிறப்பம்சங்கள்!

Vivo Z1x ஸ்மார்ட்போன் பற்றி இதுவரை வெளியான டீசர்களில், இந்த ஸ்மார்ட்போன் ஒரு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே (6.38-இன்ச் திரை என்று எதிர்பார்க்கப்படுகிறது) ஒரு வாட்டர் டிராப் நாட்ச்,  ஸ்னாப்டிராகன் 712 SoC ப்ராசஸர், 22.5W ஃப்ளாஷ் சார்ஜ் தொழில்நுட்பத்துடன் 4,500mAh பேட்டரி, மூன்று பின்புற கேமரா அமைப்பு (48 மெகாபிக்சல் சோனி IMX582 சென்சார் + 8 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா + 2 மெகாபிக்சல் டெப்த் கேமரா), 32 மெகாபிக்சல் முன்புற கேமரா மற்றும் இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரின்ட் சென்சார் ஆகிய சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. இதுவரை, இந்த ஸ்மார்ட்போன் பற்றி வெளியான சிறப்பம்சங்கள் விவோ Z5 உடன் பொருந்துவதாகத் தெரிகிறது. Vivo Z1x பற்றிய முழு சிறப்பம்சங்கள் இன்னும் சில மணி நேரத்தில் அறிமுக நிகழ்ச்சியில் வெளியிடப்படவுள்ளது.

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Excellent performance
  • Great battery life
  • Rapid fast charging
  • Bad
  • Large and bulky
  • Poor night mode
  • Funtouch OS needs refinement
  • No expandable storage
Display 6.38-inch
Processor Qualcomm Snapdragon 712
Front Camera 32-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 64GB
Battery Capacity 4500mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
  1. BSNL சிம் கார்டு வீட்டுக்கே டெலிவரி! ₹0 செலவில் செல்ஃப்-KYC வசதியுடன் - எப்படி பெறுவது? முழு விபரம்!
  2. Honor X9c: 108MP கேமரா, 1.5K Curved AMOLED டிஸ்ப்ளேவுடன் இந்தியாவில் லான்ச் உறுதி! அமேசானில் கிடைக்கும்!
  3. Poco F7 5G: இந்தியாவுக்கு ஸ்பெஷல் 7550mAh பேட்டரி! ஜூலை 1 முதல் விற்பனை!
  4. Vivo T4 Lite 5G: Dimensity 6300 SoC, IP64 பாதுகாப்புடன் இந்தியாவில மாஸ் காட்டும்!
  5. Vivo X200 FE: Zeiss கேமரா, IP68+IP69 பாதுகாப்புடன் ஒரு ஃபிளாக்‌ஷிப் போன்!
  6. அறிமுகமாகிறது Galaxy Z Fold 7, Z Flip 7: புது AI, Watch 8 சீரிஸுடன் Samsung-ன் பிரம்மாண்ட Unpacked!
  7. அறிமுகமாகிறது Nothing Phone 3: Snapdragon 8s Gen 4 SoC, 5150mAh பேட்டரியுடன் மாஸ் காட்டும்!
  8. Oppo Reno 14 5G சீரிஸ்: ஜூலை 1-ல் உலக அறிமுகம்! Amazon, Flipkart-ல் இந்தியாவில் கிடைக்குது - முழு விபரம்!
  9. அறிமுகமாகிறது Samsung Galaxy M36 5G: Orange Haze, Serene Green கலர் ஆப்ஷன்களுடன் மாஸ் எண்ட்ரி!
  10. அறிமுகமானது OnePlus Bullets Wireless Z3: 10 நிமிடம் சார்ஜ், 27 மணிநேரம் மியூசிக்! மிஸ் பண்ணாதீங்க!
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »