Photo Credit: Weibo/ iQoo
விவோவின் துணை பிராண்டான ஐகியூ தனது நிறுவனத்தின் கீழ் வெளியாகும் முதல் ஸ்மார்ட்போனை பற்றி எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இதுவரை பல டீசர்கள் வெளியாகியுள்ள நிலையில் தற்போது முதல் முறையாக போனின் பின்புறத்தின் லுக்கை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
டீசரில் வெளியாகியுள்ள தகவல்படி இந்த போனில் மூன்று பின்புற கேமராக்கள் இருக்கிறது என்றும் வரும் மார்ச் 1 ஆம் தேதி இந்த போனின் முழு தகவல்கள் வெளியாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய நிலவரப்படி இந்த ஸ்மார்ட்போன் நீலம், சிகப்பு என இரண்டு நிறங்களில் வெளியாகுகிறது. ஏற்கனவே குறிப்பிட்டுள்ளது போல் மூன்று பின்புற கேமராக்களுக்குள் ஒரு டார்ச் லைட் அமைந்திருக்கிறது.
பவர் மட்டும் வால்யூம் பட்டன்கள் போனின் வலது புறத்தில் அமைந்திருக்கும் நிலையில், கூகுள் உதவியாளருக்கான பிரத்யேக பட்டன் இருப்பது இந்த டீசரில் நம்மால் காணமுடிகிறது. போனைப்பற்றிய முழு தகவல் வெளியாகாத நிலையில் இந்த ஐகியூ பிராண்டின் கீழ் வெளியாகும் முதல் போன் விவோ V1824A மாடலாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த போன் தங்க நிறத்தில் வெளியாகலாம். கேமராக்களை பற்றி வெளியான தகவல் படி ஐகியூவின் இந்த புதிய தயாரிப்பில் 13 / 12 / 2 மெகா பிக்சல் சென்சார்கள் இருப்பதாகவும், முன்புறத்தில் 12 மெகாபிக்சல் கொண்ட செல்ஃபி ஷூட்டர் இருக்கலாம் கூறப்படுகிறது.
கூடுதல் தகவலாக இந்த போனில் ஆண்டுராய்டு 9 பைய் இருப்பதாகவும், அதன் ரேம் வசதிகள் 6 / 8 / 12 ஜிபி ஆக இருக்கலாம். இதேபோன்று 128ஜிபி மற்றும் 258 ஜிபி சேமிப்பு வசதி பெறலாம் என தகவல் வெளியாகியுள்ளது. டீசர் தகவல்படி மூலம் 6.41 இஞ்ச் ஹெச்டி அமொலெட் திரை உள்ளதை அறிய முடிகிறது.
ஏற்கெனவே வெளியாகியுள்ள தகவல்படி, விவோ ஐகியூ தயாரிப்பான இந்த புதிய போனில் 4,000mAh பேட்டரி, குவால்கம் ஸ்னாப்டிராகன் 855, இன்பில்ட் ஃபிங்கர்பிரிண்ட் டிஸ்பிளே மற்றும் சூப்பர் ஹெச்டிஆர் டிஸ்பிளேவை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்