ரெட்மி Y2 மற்றும் Y1 ஆகிய போன்கள் முறையே 9,999 ரூபாய் மற்றும் 8,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
Photo Credit: Twitter/ Redmi India
இந்த போன் ரெட்மி நோட் 7 மற்றும் ரியல்மி U1 ஆகிய போன்களுடன் சந்தையில் போட்டிபோடும்.
ரெட்மி Y3 ஸ்மார்ட் போன் வரும் 24 ஆம் தேதி ரிலீஸ் ஆகப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செல்ஃபி படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் சியோமி நிறுவனத்தால் இந்த போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்னும் போன் வெளியீட்டுக்கு ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில், ரெட்மி Y3-யில் 4,000 எம்.ஏ.எச் பேட்டரி இருக்கும் என்று தகவல் கசிந்துள்ளது. ரெட்மி Y2 போனில் 3,080 எம்.ஏ.எச் பேட்டரிதான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல இந்த போன், நீலம், மஞ்சள் மற்றும் ஊதா நிறங்களின் கலவையில் இருக்கும் ஒரு பேனலை கொண்டிருக்கும் என்றும் சியோமி சார்பில் சூசகமாக கூறப்பட்டுள்ளது. 32 மெகா பிக்சல் கேமராவுடன் ரெட்மி Y3, சந்தையில் விற்பனைக்கு வரும் என்பது முன்னரே உறுதி செய்யப்பட்டுவிட்டது.
சியோமி நிறுவனம், ரெட்மி இந்தியா ட்விட்டர் பக்கம் மூலம் இன்று போன் குறித்த ஒரு டீசரை ரிலீஸ் செய்துள்ளது. அந்த டீசரின் வழியாகத்தான் ரெட்மி Y3-யில் 4,000 எம்.ஏ.எச் பேட்டரி இருக்கும் என்பது தெரியப்படுத்தப்பட்டது. இந்த பேட்டரியின் மூலம் ஒரு நாளைக்கு மேல் போனில் சார்ஜ் இருக்கும் எனப்படுகிறது.
சியோமி நிறுவனம் சார்பில் சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட ட்வீட்டில், 24 ஆம் தேதி ரெட்மி Y3 ரிலீஸ் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 24 அன்று, மதியம் 12 மணிக்கு ரெட்மி Y3 வெளியிடப்படும் என்று #32MPSuperSelfie என்ற ஹாஷ் டேக்குடன் ட்வீட் பதிவிடப்பட்டிருந்தது. அந்த ட்வீட்டுடன் இணைக்கப்பட்டுள்ள படம், வாட்டர்-ட்ராப் நாட்ச் டிஸப்ளே வசதி போனில் இருக்கும் என்பதை கூறும் வகையில் இருந்தது.
சாம்சங்கின் 32 மெகா பிக்சல் ISOCELL ப்ரைட் GD1 இமேஜ் சென்சார்தான், ரெட்மி Y3 செல்ஃபி கேமராவுக்குப் பயன்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
ரெட்மி Y3 விலை:
ரெட்மி Y2 மற்றும் Y1 ஆகிய போன்கள் முறையே 9,999 ரூபாய் மற்றும் 8,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. எனவே ரெட்மி Y3 போனின் விலையும் இதை ஒத்திருக்கலாம் எனப்படுகிறது. இந்த போன் ரெட்மி நோட் 7 மற்றும் ரியல்மி U1 ஆகிய போன்களுடன் சந்தையில் போட்டிபோடும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Baldur's Gate 3 Developer Larian Studios Says It Uses Generative AI, CEO Responds to Backlash
Honor Win, Honor Win RT Launch Date, Colourways, RAM and Storage Configurations Revealed