5,000 எம்ஏஎச் பேட்டரியுடன் டெக்னோ ஸ்பார்க் 5 அறிமுகம்!

விளம்பரம்
Kathiravan Gunasekaran, மேம்படுத்தப்பட்டது: 22 மே 2020 13:00 IST
ஹைலைட்ஸ்
  • டெக்னோ ஸ்பார்க் 5 குவாட் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது
  • போனின் முதன்மை கேமரா 13 மெகாபிக்சல்கள் கொண்டது
  • இந்த போனின் 'டாட்-இன்' டிஸ்ப்ளே உள்ளது

டெக்னோ ஸ்பார்க் 5 ஜேடைட் மற்றும் ஸ்பார்க் ஆரஞ்சு வண்ணங்களில் கிடைக்கும்

டெக்னோ ஸ்பார்க் 5 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. 6.6 அங்குல 'டாட்-இன்' டிஸ்ப்ளே கொண்ட டெக்னோவின் முதல் ஸ்மார்ட்போன் ஆகும். இ-காமர்ஸ் தளத்திற்கு வெளியே ஸ்மார்ட்போன் விநியோகத்திற்கும் டெக்னோ ஏற்பாடு செய்துள்ளது.
 

போனின் விலை:

Tecno Spark 5 விலை ரூ.7,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் அமேசானில் வாங்குவதற்கு கிடைக்கும். போனின் ஆன்லைன் விற்பனை வெள்ளிக்கிழமை (மே 22) இன்று தொடங்கும். சில்லறை விற்பனை மே 25 முதல் தொடங்கும். இந்த போன் ஐஸ் ஜேடைட் மற்றும் ஸ்பார்க் ஆரஞ்சு வண்ணங்களில் வருகிறது. 

போனின் விவரங்கள்:

டூயல்-சிம் டெக்னோ ஸ்பார்க் 5-யில் 6.6 இன்ச் எச்டி + டாட்-இன் டிஸ்ப்ளே உள்ளது. இந்த போன் ஆண்ட்ராய்டு 10 உடன் HiOS 6.1-ல் இயங்குகிறது. போனின் உள்ளே மீடியா டெக் ஹீலியோ ஏ 22 செயலி,3  ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது.

Tecno ஸ்பார்க் 5, குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இதில் 13 மெகாபிக்சல் முதன்மை கேமரா, இரண்டு 2 மெகாபிக்சல் கேமராக்கள் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் மற்றும் நான்காவது AI ஷூட்டர் ஆகியவை அடங்கும். செல்ஃபி எடுக்க 8 மெகாபிக்சல் கேமரா உள்ளது.

இணைப்பிற்காக, இந்த போனில் 4 ஜி எல்டிஇ, வைஃபை 802 ஏசி மற்றும் புளூடூத் 5.0 ஆகியவை உள்ளன. போனின் உள்ளே, 5000 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. மேலும், ஆக்சிலரோமீட்டர், ஆம்பியண்ட் லைட் சென்சார், ப்ராக்ஸிமிட்டி சென்சார், கைரேகை சென்சார் மற்றும் ஃபேஸ் அன்லாக் சென்சார் ஆகிய சென்சார்கள் உள்ளன.

 
KEY SPECS
Display 6.60-inch
Processor octa-core
Front Camera 8-megapixel
Rear Camera 13-megapixel + 2-megapixel + 2-megapixel + AI
RAM 2GB
Storage 32GB
Battery Capacity 5000mAh
OS Android 10
Resolution 720x1600 pixels
 
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Tecno, Tecno Spark 5, Tecno Spark 5 specifications, Tecno Spark 5 price
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. 30,000 ரூபாய் விலையில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் Alcatel V3 Ultra
  2. Lava Shark 5G செம்ம! 10,000 ரூபாய்க்கு கீழே விற்பனைக்கு வரும் செல்போன்
  3. iQOO Neo 10 Pro+ : மே 20 லாஞ்சுக்கு முன்னாடி ஸ்பெக்ஸ் வெளியாகிடுச்சு
  4. Realme GT 7 ஸ்மார்ட்போன் MediaTek Dimensity 9400 in SoC-ஐக் கொண்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
  5. Samsung Galaxy S25 Edge இந்தியாவில் விலை அறிவிப்பு, முன்பதிவு தொடங்கியது
  6. Motorola Razr 60 Ultra: இந்தியாவில் அறிமுகமான புதிய மடிக்கும் மொபைல்
  7. Vivo V50 Elite Edition வட்ட வடிவ கேமராவுடன் இந்தியாவில் அறிமுகம்
  8. Airtel Black Rs. 399 திட்டம்: IPTV உடன் புதிய புரட்சி செய்ய காத்திருக்கும் அறிவிப்பு
  9. Alcatel V3 Ultra செல்போன் பட்ஜெட் பிரியர்களுக்கு ஒரு சுவாரஸ்ய அப்டேட்
  10. Moto G86 Power 5G பற்றி ஆன்லைனில் வெளியான முக்கிய அறிவிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.