டெக்னோ ஸ்பார்க் 5 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. 6.6 அங்குல 'டாட்-இன்' டிஸ்ப்ளே கொண்ட டெக்னோவின் முதல் ஸ்மார்ட்போன் ஆகும். இ-காமர்ஸ் தளத்திற்கு வெளியே ஸ்மார்ட்போன் விநியோகத்திற்கும் டெக்னோ ஏற்பாடு செய்துள்ளது.
Tecno Spark 5 விலை ரூ.7,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் அமேசானில் வாங்குவதற்கு கிடைக்கும். போனின் ஆன்லைன் விற்பனை வெள்ளிக்கிழமை (மே 22) இன்று தொடங்கும். சில்லறை விற்பனை மே 25 முதல் தொடங்கும். இந்த போன் ஐஸ் ஜேடைட் மற்றும் ஸ்பார்க் ஆரஞ்சு வண்ணங்களில் வருகிறது.
டூயல்-சிம் டெக்னோ ஸ்பார்க் 5-யில் 6.6 இன்ச் எச்டி + டாட்-இன் டிஸ்ப்ளே உள்ளது. இந்த போன் ஆண்ட்ராய்டு 10 உடன் HiOS 6.1-ல் இயங்குகிறது. போனின் உள்ளே மீடியா டெக் ஹீலியோ ஏ 22 செயலி,3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது.
Tecno ஸ்பார்க் 5, குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இதில் 13 மெகாபிக்சல் முதன்மை கேமரா, இரண்டு 2 மெகாபிக்சல் கேமராக்கள் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் மற்றும் நான்காவது AI ஷூட்டர் ஆகியவை அடங்கும். செல்ஃபி எடுக்க 8 மெகாபிக்சல் கேமரா உள்ளது.
இணைப்பிற்காக, இந்த போனில் 4 ஜி எல்டிஇ, வைஃபை 802 ஏசி மற்றும் புளூடூத் 5.0 ஆகியவை உள்ளன. போனின் உள்ளே, 5000 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. மேலும், ஆக்சிலரோமீட்டர், ஆம்பியண்ட் லைட் சென்சார், ப்ராக்ஸிமிட்டி சென்சார், கைரேகை சென்சார் மற்றும் ஃபேஸ் அன்லாக் சென்சார் ஆகிய சென்சார்கள் உள்ளன.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்