Tecno Spark 20 Pro 5G இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. Tecno நிறுவனத்தின் ஸ்பார்க் சீரியஸ் மடலில் வரும் இந்த ஸ்மார்ட்போன் டிசம்பர் 2023ல் அறிமுகப்படுத்தப்பட்ட 4G மாடலை விட செயல்திறன் மேம்படுத்தப்பட்டு வந்துள்ளது. கடந்த மாதம் சர்வதேச சந்தைகளில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது இந்தியாவுக்கு வந்துள்ளது.
8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் 15,999 ரூபாய்
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் 16,999 ரூபாய்
ஸ்டார்ட்ரெயில் பிளாக் மற்றும் பளபளப்பான வெள்ளை வண்ணத்தில் கிடைக்கிறது. அனைத்து டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளிலும் UPI மற்றும் பேப்பர் ஃபைனான்ஸ் ஆகியவற்றிலும் 2,000 வரை ஆபர் தரப்படுகிறது.
Tecno Spark 20 Pro 5G செல்போன் 120Hz புதுப்பிப்பு விகிதத்துடன் கூடிய 6.78-இன்ச் முழு-HD+ (2,460x1,080 பிக்சல்கள்) IPS LCD திரையைக் கொண்ட இரட்டை சிம் ஸ்மார்ட்போன் ஆகும். இது MediaTek Dimensity 6080 சிப்செட் மற்றும் Mali-G57 MC2 GPU உடன் 8GB ரேம் மற்றும் 256GB வரை உள்ளடங்கிய சேமிப்பகத்துடன் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான HiOS 14 OS மூலம் இயங்குகிறது. இது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனரையும் கொண்டுள்ளது.
f/1.8 aperture உடன் கூடிய 108-megapixel முதன்மை கேமரா, f/2.4 aperture உடன் 2-megapixel டெப்த் சென்சார் மற்றும் ஒரு துணை லென்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. முதன்மை கேமரா 30fps உடன் 1440p வரை வீடியோ சப்போர்ட் செய்கிறது. முன்பக்கத்தில், 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது.
Tecno Spark 20 Pro 5G மாடலில் 33W வயர்டு சார்ஜிங் வசதியுடன் 5,000mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது 10W ரிவர்ஸ் சார்ஜிங்கையும் ஆதரிக்கிறது. இணைப்பிற்காக 4G LTE, 10 5G பட்டைகள், WiFi 5, ப்ளூடூத் 5.3, GPS மற்றும் FM ரேடியோ வசதி உள்ளது. ஸ்மார்ட்போன் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP53 மதிப்பீட்டை கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்