Photo Credit: Qualcomm
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். இப்போ நாம் பார்க்க இருப்பது Snapdragon 8 Elite சிப் பற்றி தான்.
ஹவாயில் நடந்த Snapdragon Summit மாநாட்டில் Snapdragon 8 Elite சிப் அறிமுகம் செய்யப்பட்டது. Qualcomm நிறுவனம் வெளியிட்ட இந்த புதிய மொபைல் சிப் மூலம் உருவாகும் சாதனங்கள் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் மல்டி-மாடல் AI திறன்கள் கொண்டிருக்கும். Qualcomm Oryon CPU மற்றும் மேம்படுத்தப்பட்ட AI பட செயலாக்கம் (ISP) போன்ற அம்சங்கள் இதில் இருக்கிறது. Snapdragon 8 Elite அதன் முந்தைய சிப் மாடலான Snapdragon 8 Gen 3.விட மிகப்பெரிய செயல்திறன் பாய்ச்சலை கொண்டுவரும் என கூறப்பட்டுள்ளது.
குவால்காம் நிறுவனம் வெளியிட்ட Snapdragon 8 Elite சிப் மூலம் இயங்கும் ஆண்ட்ராய்டு செல்போன்கள் வரும் வாரங்களில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . Asus, Honor, iQOO, OnePlus, Oppo, Realme, Samsung, Vivo மற்றும் Xiaomi உள்ளிட்ட உலகளாவிய செல்போன் நிறுவனம் தயாரிப்புகளில் Snapdragon 8 Elite பொருத்தப்படும்.
Qualcomm நிறுவனம் வெளியிட்ட தகவல்படி SM8750-AB என்கிற மாடல் எண்ணைக் கொண்ட ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட், ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 3 சிப்களுக்கு அடுத்து முதன்மையான சிப்பாக இருக்க போகிறது. இந்த சிப் 3-நானோமீட்டர் புனையமைப்பு செயல்முறையின் அடிப்படையில் 64-பிட் கட்டமைப்பில் கட்டமைக்கப்பட்டுள்ளது. 4.32GHz உச்ச கடிகார வேகம் கொண்ட எட்டு கோர்களுடன் Qualcomm Oryon CPU கொண்டுள்ளது.
சிங்கிள் மற்றும் மல்டி-கோர் செயல்திறனில் 45 சதவீத முன்னேற்றத்தை வழங்குவதாகக் கூறப்படுகிறது. பிரவுசிங் வேகம் 62 சதவீதம் மேம்படுத்தப்பட்டுள்ளது. LPDDR5x ரேம் மற்றும் UFS 4.0 மெமரியை சப்போர்ட் செய்யும் என்று Qualcomm நிறுவனம் கூறுகிறது. கேமிங், தரமான 3D வீடியோ இயக்க அன்ரியல் என்ஜின் 5 அம்சத்தை கொண்டுவருகிறது. Qualcomm AI இன்ஜினின் ஒரு பகுதியாக மேம்படுத்தப்பட்ட Hexagon NPU கொண்டுள்ளது. இது 40 சதவிகிதம் சிறந்த கேமிங் செயல்திறன் மற்றும் 35 சதவிகிதம் மேம்படுத்தப்பட்ட ரே-டிரேசிங் திறனை வெளிப்படுத்தும்.
குவால்காம் ஒட்டுமொத்த AI செயல்திறனில் 45 சதவிகிதம் அதிகரிப்பதாகக் கூறுகிறது. ஆன்-டிவைஸ் ஜெனரேட்டிவ் AI, மல்டி-மோடல் திறன்களை சப்போர்ட் செய்கிறது. முந்தைய சிப்களை ஒப்பிடும்போது 27 சதவீதம் அதிக ஆற்றல் திறன் கொண்டது என்று குவால்காம் நிறுவனம் கூறுகிறது. Snapdragon X80 5G Modem-RF சிஸ்டம் உள்ளது. இதனால் மல்டி-ஜிகாபிட் 5G வேகத்தை அடைய முடியும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்