iQOO நிறுவனத்தின் பிளாக்ஷிப் கேமிங் ஸ்மார்ட்போனான iQOO 15 Ultra சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் அசுரத்தனமான வேகம் மற்றும் பேட்டரி விவரங்கள் இங்கே.
Photo Credit: iQOO
iQOO 15 Ultra: Snapdragon 8 Elite Gen 5, 7,400mAh, 24GB RAM, 144Hz
இன்னைக்கு நாம பார்க்கப்போறது ஸ்மார்ட்போன் உலகத்துல ஒரு மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிற ஒரு மான்ஸ்டர் போனை பத்திதான். அதுதான் iQOO 15 Ultra. விவோவோட துணை பிராண்டான iQOO எப்பவுமே பெர்பார்மன்ஸ்ல சமரசம் செஞ்சுக்க மாட்டாங்கன்னு நமக்கு தெரியும். ஆனா இந்த தடவை அவங்க செஞ்சிருக்கிறது ஒரு 'அல்ட்ரா' லெவல் சம்பவம். இந்த போனோட ஹைலைட்டே இதுல இருக்குற Snapdragon 8 Elite Gen 5 பிராசஸர் தான். இது 3nm தொழில்நுட்பத்துல உருவானது. இதோட பவரை பத்தி சொல்லணும்னா, AnTuTu பெஞ்ச்மார்க் டெஸ்ட்ல இது 4.5 மில்லியனுக்கும் அதிகமான புள்ளிகளை எடுத்து உலகத்தையே மிரள வெச்சிருக்கு. இப்போதைக்கு ஆண்ட்ராய்டு உலகத்துல இதுதான் நம்பர் ஒன் சிப்செட்.
iQOO 15 Ultra-வை ஒரு போன்னு சொல்றதை விட ஒரு குட்டி கேமிங் கன்சோல்னு சொல்லலாம். ஏன்னா இதுல Ice Dome Cooling System இருக்கு. இதுல ஒரு Active Cooling Fan-ம் இருக்கு. நீங்க எவ்வளவோ நேரம் கேம் விளையாடினாலும் போன் சூடாகாம பாத்துக்க ஒரு தனி வென்ட் (Vent) வசதியும் குடுத்துருக்காங்க. இது போக, கன்சோல் கண்ட்ரோலர்ல இருக்குற மாதிரி Pressure-sensitive Shoulder Triggers இதுல இருக்கு. இதனால BGMI, Genshin Impact போன்ற கேம்களை விளையாடும்போது நீங்க தான் ப்ரோ பிளேயர்!
6.85 இன்ச் 2K Samsung M14 LTPO AMOLED டிஸ்ப்ளே இதுல இருக்கு. 144Hz ரெஃப்ரெஷ் ரேட் இருக்குறதுனால ஸ்க்ரோலிங் ரொம்பவே ஸ்மூத்தா இருக்கும். அதுமட்டும் இல்லாம இதோட பீக் பிரைட்னஸ் 8,000 nits! வெயில்ல நின்னு போன் பார்த்தா கூட டிஸ்ப்ளே அவ்வளவு தெளிவா தெரியும். இதுல 3D அல்ட்ராசோனிக் பிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் இருக்கு, இது உங்க கை ஈரமாக இருந்தா கூட பட்டென போனை அன்லாக் செஞ்சிடும்.
நம்ம ஊர்ல பவர் கட் ஆனா கூட கவலைப்பட தேவையில்லை போல! ஏன்னா இதுல 7,400mAh மெகா பேட்டரி இருக்கு. ஒரு தடவை சார்ஜ் போட்டா ரெண்டு நாளைக்கு நிம்மதியா இருக்கலாம். இவ்வளவு பெரிய பேட்டரி இருந்தாலும், இதை சார்ஜ் பண்ண 100W Wired Fast Charging மற்றும் 40W Wireless Charging வசதியும் இருக்கு. கேமிங் போன்னு சொன்னாலே கேமரா சுமார்னு நினைப்போம். ஆனா இங்க விவோவோட டெக்னாலஜியை புகுத்தியிருக்காங்க.
● 50MP மெயின் கேமரா (Sony IMX921 sensor)
● 50MP அல்ட்ரா வைட் கேமரா
● 50MP 3x பெரிஸ்கோப் டெலிபோட்டோ லென்ஸ் இந்த மூணு கேமராவும் சேர்ந்து
போட்டோக்களை வேற லெவல்ல கொடுக்கும். 8K வீடியோ ரெக்கார்டிங் வசதியும் இதுல உண்டு.
சீனாவில் இந்த போன் அறிமுகமாகியுள்ளது. இதன் ஆரம்ப விலை சுமார் CNY 5,699 (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 74,000). இதுல அதிகபட்சமா 24GB RAM மற்றும் 1TB ஸ்டோரேஜ் வேரியண்ட் வரை கிடைக்குது. இதோட டாப் மாடல் விலை ரூ. 1 லட்சம் வரை போகுது. iQOO 15 Ultra உண்மையிலேயே ஒரு பெர்பார்மன்ஸ் பீஸ்ட். உங்களுக்கு பேட்டரி ரொம்ப முக்கியம், கேமிங் தான் என் உயிர் அப்படின்னு நினைக்கிறவங்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். இது பிப்ரவரி மாசம் கடைசியில அல்லது மார்ச் ஆரம்பத்துல இந்தியாவுக்கு வரும்னு எதிர்பார்க்கப்படுது.இந்த மிரட்டலான iQOO 15 Ultra பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க? இது இந்தியாவுக்கு வந்தா வாங்குவீங்களா? கமெண்ட்ல சொல்லுங்க.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,590
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹41,061
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999