Qualcomm நிறுவனம் Snapdragon 8 Gen 5 சிப்செட்டின் வெளியீட்டு தேதியை நவம்பர் 26 என அறிவித்துள்ளது
Photo Credit: Weibo/ Qualcomm
Qualcomm Snapdragon 8 Gen 5 சிப்செட் நவம்பர் 26 அன்று அறிமுகமாகிறது
இப்போ ப்ராசஸர் உலகத்துல இருந்து ஒரு முக்கியமான அறிவிப்பு வந்திருக்கு. Qualcomm நிறுவனம், அவங்களுடைய அடுத்த Flagship Chipset ஆன Snapdragon 8 Gen 5-ன் லான்ச் தேதியை இப்போ அதிகாரப்பூர்வமா அறிவிச்சிருக்காங்க. Qualcomm நிறுவனம், நவம்பர் 26 அன்று சீனால இந்த புதிய Snapdragon 8 Gen 5 சிப்செட்டை அறிமுகப்படுத்தப் போறாங்கன்னு அவங்களுடைய வீபோ (Weibo) பக்கத்துல உறுதி செஞ்சிருக்காங்க. இது, டாப்-எண்ட் Snapdragon 8 Elite Gen 5 சிப்செட்க்கு அடுத்துள்ள ஒரு மாடலா இருக்கும்னு எதிர்பார்க்கப்படுது.
இந்த சிப்செட் Geekbench டெஸ்ட்ல நல்ல மதிப்பெண்களைப் பெற்றிருக்கு:
● Single-Core: சுமார் 3,000 புள்ளிகள்
● Multi-Core: சுமார் 10,000 புள்ளிகள் அதுமட்டுமில்லாம, இதன் AnTuTu Score 3.3 மில்லியனுக்கு மேல் இருக்கும்னு எதிர்பார்க்கப்படுது. இது ஒரு பவர்ஃபுல் சிப்செட்-ஆ இருக்கும்னு உறுதி
இந்த சிப்செட் 8-கோர் கொண்டது. இதில் இரண்டு பிரைம் கோர்கள் 3.80GHz வேகத்துலயும், ஆறு பெர்ஃபார்மன்ஸ் கோர்கள் 3.32GHz வேகத்துலயும் இயங்கலாம்னு டிப்ஸ்டர்கள் தகவல் கொடுத்திருக்காங்க. இந்த Snapdragon 8 Gen 5 சிப்செட், டாப்-எண்ட் Snapdragon 8 Elite Gen 5-ல் இருக்கும் அதே Adreno 840 GPU-வையே பயன்படுத்தலாம்னு எதிர்பார்க்கப்படுது. ஆனா, செலவுகளைக் குறைக்க GPU-ல இருக்கிற ப்ராசஸிங் யூனிட்டுகளோட எண்ணிக்கை கம்மியாக இருக்கலாம். ஆனாலும், கிராபிக்ஸ் விஷயத்துல இது நல்ல பெர்ஃபார்மன்ஸைக் கொடுக்கும். GFXBench Aztec Ruins டெஸ்ட்ல கூட 1440p ரெசல்யூஷன்ல 100fps-க்கு மேல Maintain பண்ணியிருக்கு.
இந்த சிப்செட் இன்னும் லான்ச் ஆகல. ஆனா, இந்த சிப்செட்டைப் பயன்படுத்தப்போற சில மாடல்கள் லீக் ஆகிருக்கு. அது என்னன்னா:
● OnePlus 15R (குளோபல் மார்க்கெட்க்கு)
● Vivo S50 (குளோபல் மார்க்கெட்க்கு Vivo X300 FE-ஆ வரலாம்)
● Redmi Turbo மற்றும் Poco F8 மாடல்களிலும் இந்த சிப்செட் இருக்கலாம்னு சொல்லியிருக்காங்க.
மொத்தத்துல, Qualcomm Snapdragon 8 Gen 5 சிப்செட், Snapdragon 8 Elite Gen 5-க்கு ஒரு நல்ல போட்டியா, ஆனா மலிவான விலையில வரப்போகுது. இது அடுத்த வருஷத்தோட பல ஃபிளாக்ஷிப் போன்களுக்கு பவர் கொடுக்கும்.
இந்த Snapdragon 8 Gen 5 சிப்செட்டின் பெர்ஃபார்மன்ஸ் மற்றும் Geekbench Score உங்களுக்கு திருப்தி அளிக்குதா? OnePlus 15R-ல் இந்த சிப்செட் வருவது சரியான முடிவா? கமெண்ட்ல சொல்லுங்க.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்