OnePlus 13 தரமான செல்போனை களத்தில் இறக்கிவிட்டு நடக்கும் ஆட்டம்

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 4 டிசம்பர் 2024 11:26 IST
ஹைலைட்ஸ்
  • OnePlus 13 Midnight Ocean மற்றும் பல வண்ணங்களில் கிடைக்கும்
  • IP68+69-மதிப்பிடப்பட்ட கட்டமைப்புடன் வருகிறது
  • இது 24ஜிபி வரை ரேம் கொண்ட ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் மூலம் இயக்கப்படு

OnePlus 13 ஆனது Hasselblad-டியூன் செய்யப்பட்ட டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது

Photo Credit: OnePlus

நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். இப்போ நாம் பார்க்க இருப்பது OnePlus 13 செல்போன் பற்றி தான்.


OnePlus 13 அக்டோபர் 31 அன்று சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. விரைவில் இந்தியாவிலும் உலக சந்தைகளிலும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 24ஜிபி வரை ரேம் கொண்ட ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது ஆண்டின் தொடக்கத்தில் வராது. என கூறப்படுகிறது. குவால்காமின் புதிய ஸ்னாப்டிராகன் 8 எலைட் SoC மூல இயங்கும் முதல் கைபேசிகளில் இதுவும் ஒன்றாகும். 50 மெகாபிக்சல் டிரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் கூடிய ஹாசல்பிளாட்-டியூன் செய்யப்பட்ட ஆப்டிக்ஸ் உடன் பொருத்தப்பட்டுள்ளது.

OnePlus 13 வெளியீடு

OnePlus 13 இந்தியாவில் மற்றும் உலகளவில் ஜனவரி 2025 இல் அறிமுகப்படுத்தப்படும் என்று நிறுவனம் ஒரு செய்திக்குறிப்பு மூலம் உறுதிப்படுத்தியுள்ளது. ஆர்க்டிக் டான், பிளாக் எக்லிப்ஸ் மற்றும் மிட்நைட் ஓஷன் ஆகிய மூன்று வண்ணங்களில் இந்த கைபேசி வாங்குவதற்கு கிடைக்கும். மேம்பட்ட டச் திறன் மற்றும் ஸ்கஃப் எதிர்ப்பிற்காக மைக்ரோ-ஃபைபர் ஸ்கின் கொண்டிருக்கும் என ஒன்பிளஸ் கூறுகிறது. மேலும், OnePlus 13 ஆனது தூசி மற்றும் நீர் உட்செலுத்தலுக்கு எதிராக சமீபத்திய IP68+69-மதிப்பிடப்பட்ட கட்டமைப்பைக் கொண்டிருக்கும். இது பற்றிய கூடுதல் விவரங்கள் வரும் வாரங்களில் தெரியவரும்.


OnePlus 13 அறிமுகத்திற்காக நிறுவனம் ஒரு பிரத்யேக மைக்ரோசைட்டையும் அமைத்துள்ளது , அதில் ஐந்து லெவல் கொண்ட போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. வெற்றி பெற்றால் OnePlus தயாரிப்புகளை வெல்லும் வாய்ப்பைப் பெறலாம். 500 Redcoins கூடுதலாக 3,000 ரூபாய் வெகுமதி கிடைக்கும். கூடுதலாக OnePlus டிராவல் கிட் வழங்குகிறது .

OnePlus 13 அம்சங்கள்

OnePlus 13 சீனாவில் வெளியிடப்பட்ட மாடல் 6.82-இன்ச் Quad-HD+ LTPO AMOLED திரையை கொண்டுள்ளது. இது 120Hz புதுப்பிப்பு வீதம், 4,500 nits இன் உச்ச பிரகாசத்தை கொண்டுள்ளது. Dolby Vision சப்போர்ட் இருக்கிறது.இது Qualcomm இன் சமீபத்திய Snapdragon 8 Elite சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. 24GB வரை LPDDR5X ரேம் மற்றும் 1TB வரை UFS 4.0 மெமரியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது Adreno 830 GPU ஆப்ஷனை பெறுகிறது.


ஹாசல்பிளாட்-டியூன் செய்யப்பட்ட டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. இதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS), 50 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா மற்றும் 50 மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா கொண்ட 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா உள்ளது. சென்சார், OIS வசதியும் இருக்கிறது. செல்ஃபிக்களுக்காக முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் கேமராவை கொண்டுள்ளது. 100W ஃபிளாஷ் வயர்டு சார்ஜ் மற்றும் 50W ஃபிளாஷ் வயர்லெஸ் சார்ஜ் ஆகியவற்றிற்கான சப்போர்ட் உடன் 6,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது ரிவர்ஸ் வயர்டு (5W) மற்றும் ரிவர்ஸ் வயர்லெஸ் (10W) சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: OnePlus 13, OnePlus 13 Specifications, OnePlus 13 Launch Timeline
 ...மேலும்
        
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. 7,000mAh பேட்டரி கொண்ட உலகின் முதல் போன்! Oppo F31 சீரிஸ் லீக் ஆகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!
  2. அவசர வேலைகளில் 'உதவாத' ஏர்டெல்! ஒரே வாரத்தில் இரண்டாவது முறை சேவை முடக்கம்
  3. மடக்கலாம், மிரட்டலாம்! Honor-ன் புது போன் சந்தையில் அறிமுகம்! விலை, சிறப்பம்சங்கள் இதோ!
  4. பெங்களூருவில் Apple-ன் புதிய கடை! செப்டம்பர் 2-ல் திறப்பு! என்ன ஸ்பெஷல்?
  5. இந்தியாவில் Pixel 10, Pixel 10 Pro, Pixel 10 Pro XL லான்ச்! ₹79,999-க்கு Google-ன் புது அஸ்திரம்
  6. கூகிளின் முதல் IP68 ஃபோல்டபிள் போன் லான்ச்! ₹1.72 லட்சத்தில் Pixel 10 Pro Fold
  7. Redmi 15 5G: ₹15,000-க்குள்ளே 7,000mAh பேட்டரி, 144Hz டிஸ்ப்ளே உடன் மாஸ் என்ட்ரி!
  8. Airtel-ன் அதிர்ச்சி அறிவிப்பு! ₹249 ரீசார்ஜ் திட்டம் நீக்கம்! இனி ₹50 அதிகம் செலவு செய்யணும்
  9. Honor X7c 5G லான்ச்! ₹14,999-க்கு 5G போன்! Snapdragon 4 Gen 2 SoC, 5,200mAh பேட்டரி
  10. Airtel-ஆல் வந்த ஜாக்பாட்! 6 மாதங்களுக்கு Apple Music இலவசம்! எப்படி ஆக்டிவேட் செய்வது
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.