அக்குவாஸ் ஆர்2 ஸ்நாப்டிராகன் 845 SoC, 5.2 இன்ச் டிஸ்பிளே, 64ஜிபி இன்பில்ட் ஸ்டோரேஜ், வாட்டர் ப்ரூஃப் மற்றும் டஸ்ட் ப்ரூஃப்-க் கொண்டுள்ளது
ஷார்ப் அக்குவாஸ் ஆர்2 காம்பேக்ட் ஸ்நாப்டிராகன் 845 SoCல் இயங்குகிறது.
ஷார்ப் அக்குவாஸ் ஆர்2 காம்பேக்ட் ஸ்மார்ட்போன் ஜப்பானில் அறிமுகமாகியுள்ளது. தற்போது பிரபலமாகி வரும் டிஸ்பிளே நாட்சை, அதை இந்த ஸ்மார்ட்போன் டூயல் நாட்ச் மூலம் ஒரு படி முன்னோக்கி கொண்டு சென்றுள்ளது. அக்குவாஸ் ஆர்2 ஸ்நாப்டிராகன் 845 SoC, 5.2 இன்ச் டிஸ்பிளே, 64ஜிபி இன்பில்ட் ஸ்டோரேஜ், வாட்டர் ப்ரூஃப் மற்றும் டஸ்ட் ப்ரூஃப்-க் கொண்டுள்ளது.
ஷார்ப் அக்குவாஸ் ஆர்2 காம்பேக்ட்டின் விலை என்னவாக இருக்குமென்று இது வரை அறிவிக்கப்படவில்லை. இந்த ஸ்மார்ட்போன் ஜப்பானில் ஜனவரி மாதம் முதல் சாஃப்ட் பேங்க் வழியாக கிடைக்கும். முன் குறிப்பிட்டது போல இந்த போனில் இரு நாட்ச்கள் உள்ளன. ஷார்ப் அக்குவாஸ் ஆர்2 காம்பேக்டில் அலுமினியம் ஃப்ரேம், வலது மூலையில் ஒலியை கூட்ட குறைக்க பட்டன்கள் மற்றும் போனின் முன்புறம் ஒரு கேமிராவும், பின்புறம் ஒரு கேமிராவும் உள்ளது.
ஷார்ப் அக்குவாஸ் ஆர்2 காம்பேக்ட்டில் 5.2 இன்ச் ஃபுல் ஹெச்.டி + டிஸ்பிளேயுடன் கொரில்லா கிளாஸ் 3 மற்றும் டெம்பர் கிளாஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்நாப்டிராகன் 845 SoCயுடன் 4 ஜிபி ரேமினைக் கொண்டுள்ளது. 64ஜிபி உள்கட்ட சேமிப்பு மற்றும் 512 ஜிபி மைக்ரோSD பயன்படுத்துவதற்கான வசதியும் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 2500 2mAh பேட்டரி உள்ளது. இதன் எடை 135கிராமாகும். பேஸ் அன்லாக் மற்றும் ஃபிங்கர் பிரிண்ட் சென்சாரைக் கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Redmi Note 15 Series India Launch Timeline Tipped; Redmi 15C Could Debut This Month