Samsung Galaxy S10 Lite-ன் 48-megapixel main shooter, புதிய Super Steady OIS தொழில்நுட்பத்தை ஆதரிக்கும்
Samsung Galaxy S10 Lite, Prism White, Prism Black மற்றும் Prism Blue ஆகிய வண்ணங்களில் வரும்
Samsung-ன் அடுத்த படைப்பான Galaxy S10 Lite வெளியானது. போனை பற்றிய விலை, விவரங்கள் மற்றும் சிறப்பம்சங்கள் உள்ளே.
தென் கொரிய எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் Galaxy S10 Lite-ன் விலையை இன்னும் வெளியிடவில்லை. ஆனால், ஜனவரி 7-ஆம் தேதி CES 2020 அதிகாரப்பூர்வமாகத் தொடங்கும் அல்லது அடுத்தடுத்த நாட்களில் ஒரு அறிவிப்பை எதிர்பார்க்கலாம். Galaxy S10 Lite இரண்டு வேரியண்டுகளில் வரும் – 6GB RAM + 128GB ஸ்டோரேஜ் மற்றும் 8GB RAM + 128GB ஸ்டோரேஜ் ஆகும். இந்த போன் Prism White, Prism Black மற்றும் Prism Blue கலர் ஆப்ஷன்களில் வரும்.
![]()
Samsung Galaxy S10 Lite f/2.2 aperture மற்றும் 123-degree field of view உடன் 12-megapixel ultra-wide angle கேமராவைக் கொண்டுள்ளது
Samsung Galaxy S10 Lite, pixel density of 394ppi உடன் 6.7-inch Full HD+ (1080 x 2400 pixels) Infinity-O Super AMOLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இந்த போன் 64-bit 7nm octa-core processor-ல் இருந்து சக்தியை ஈர்க்கிறது. இந்த போனை Exynos SoC அல்லது Qualcomm chipset இயக்குமா என்பதை Samsung குறிப்பிடவில்லை. இந்த சாம்சங் போன், 8GB RAM வரை பேக் செய்கிறது. ஆனால், அதன் லோயர்-எண்ட் வேரியண்டான 6GB RAM-மும் பட்டியலில் உள்ளது.
Samsung Galaxy S10-ன் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பில், Super Steady OIS தொழில்நுட்பத்தை ஆதரிக்கும் f/2.0 lens உடன் 48-megapixel main shooter அடங்கும். மென்மையான மற்றும் மங்கலற்ற வீடியோக்களை வழங்குவதற்கான கை அசைவுகளை மறுக்க கேமரா செயலியில் Super Steady mode உடன் இணைந்து Super Steady OIS அம்சம் செயல்படுகிறது என்று சாம்சங் கூறுகிறது. இதில் f/2.2 aperture மற்றும் 123-degree field of view உடன் 12-megapixel ultra-wide angle கேமராவும் சேர்ந்துள்ளது. close-up புகைப்படங்களை எடுக்க f/2.4 lens உடன் 5-megapixel macro கேமராவும் உள்ளது.
முன்புறத்தில் f/2.2 lens உடன் 32-megapixel செல்ஃபி கேமரா உள்ளது. Galaxy S10 Lite சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,500mAh பேட்டரியை பேக் செய்கிறது. இந்த போனில், அங்கீகாரத்திற்காக in-display fingerprint சென்சார் பொருத்தப்பட்டுள்ளது, ஆனால், முன் கேமராவும் face unlock-ஐ ஆதரிக்கு. இது 128GB இண்டர்னல் ஸ்டோரேஜை வழங்குகிறது. இதனை microSD card வழியாக (1TB வரை) விரிவாக்கம் செய்யலாம். இந்த போன் 75.6 x 162.5 x 8.1mm அளவீட்டையும், 186 எடையையும் கொண்டதாகும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Neutrino Detectors May Unlock the Search for Light Dark Matter, Physicists Say
Uranus and Neptune May Be Rocky Worlds Not Ice Giants, New Research Shows
Steal OTT Release Date: When and Where to Watch Sophie Turner Starrer Movie Online?
Murder Report (2025): A Dark Korean Crime Thriller Now Streaming on Prime Video