6.4 இன்ச் டிஸ்ப்ளே... டூயல் ரியர் கேமரா...சாம்சங் கேலக்ஸி ஏ20யின் சிற‌ப்பம்சங்கள்!

6.4 இன்ச் டிஸ்ப்ளே... டூயல் ரியர் கேமரா...சாம்சங் கேலக்ஸி ஏ20யின் சிற‌ப்பம்சங்கள்!

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ20ன் விலை 12,490 ரூபாய். இதன் மெமரி 3GB + 32GBயாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஹைலைட்ஸ்
  • அடுத்த வாரத்திலிருந்து விற்பனைக்கு வரும் என்று சாம்சங் அறிவித்துள்ளது
  • இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ20ன் விலை 12490 ரூபாய்
  • சாம்சங் கேலக்ஸி ஏ10, ஏ30, ஏ50 வகை போன்களின் வரிசையில் ஏ20 இணைகிறது
விளம்பரம்

சாம்சங் கேலக்ஸி ஏ20 இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. அடுத்த வாரத்திலிருந்து விற்பனைக்கு வரும் என்று சாம்சங் அறிவித்துள்ளது. கேலக்ஸி ஏ ரக போன்களின் 2019ம் ஆண்டுக்கான ஸ்மார்ட்போனாக இது வெளியாகியுள்ளது. சாம்சங் கேலக்ஸி ஏ10, ஏ30, மற்றும் ஏ50 வகை போன்களின் வரிசையில் இந்த போனும் இந்திய சந்தையில் இடம் பிடித்துள்ளது. இது ரெட்மி நோட் 7க்கு போட்டியாக கருதப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ20-யின் இந்திய விலை:

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ20ன் விலை 12,490 ரூபாய். இதன் மெமரி 3GB + 32GBயாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது கறுப்பு, நீலம் மற்றும் சிவப்பு வண்ணத்தில் கிடைக்கிறது. ஆன்லைனில் ஏப்ரல் 8ம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ளது. எந்த விதமான அறிமுக சலுகையையும் சாம்சங் அறிவிக்கவில்லை.

சாம்சங் கேலக்ஸி ஏ20 ரஷ்யாவில் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.

சாம்சங் கேலக்ஸி ஏ20 சிறப்பம்சங்கள்:

சாம்சங் கேலக்ஸி ஏ20 ஆன்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தில் இயங்குகிறது. வாட்டர் ப்ரூஃபுடன் கூடிய  6.4 இன்ச் ஹச்.டி சூப்பர் AMOLED டிஸ்ப்ளே. 1.6GHz ஆக்டகோர் Exynos 7884 ப்ராஸசர் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.  32 ஜிபி உள்ளக மெமரியும், 512 ஜிபி இணைக்கப்படும் மெமரியும் கொண்டுள்ளது. 

செல்ஃபி கேமரா 8 மெகா பிக்ஸலுடனும், பின்பக்கத்தில் உள்ள இரு கேமராக்கள் முறையே 13 மற்றும் 5 மெகா பிகசலுடன் இயங்குகின்றன. 

பையோமெட்ரிக் சென்சார், 4000 மில்லி ஆம்பியர் பேட்டரி, சி டைப் சார்ஜர் என வடிவமைக்கப்பட்டுள்ளது.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Gadgets 360 Staff The resident bot. If you email me, a human will respond. மேலும்
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
  1. சக்கைபோடு போடும் Marco படம் OTT தளத்தில் வெளியாவது எப்போது?
  2. இந்தியாவுக்கு வரும் புதிய iQOO போன்! சும்மா தெறிக்க விட போகுது
  3. இனிமேல் இப்படியும் வரும் டேட்டா இல்லாத புதிய காலிங் திட்டங்கள் அறிமுகம்
  4. Samsung Galaxy சீரியஸ் செல்போன்கள் சும்மா நின்னு பேசும் பாதுகாப்பு வசதி
  5. Nothing நிறுவனத்திடம் இருந்து இப்படி ஒரு செல்போனை எதிர்பார்க்கலாம்
  6. Galaxy S25 Edge செல்போன் சஸ்பென்ஸ் மேல் சஸ்பென்ஸ் எகிறவிடும் சாம்சங்
  7. Samsung Galaxy S25 Ultra புடிச்சா குதிரை கொம்பா தான் புடிக்கணும்
  8. Samsung Galaxy S25, Galaxy S25+ கொடுக்கும் விலைக்கு என்ன இருக்கு இதில்?
  9. WhatsApp Status வைத்தால் Facebook, Instagram போகும்! அதிரி புதிரி அப்டேட்
  10. Redmi K90 Pro செல்போன் மிரள விடும் அம்சங்களுடன் வருகிறது
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »