இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ20ன் விலை 12,490 ரூபாய். இதன் மெமரி 3GB + 32GBயாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ20ன் விலை 12,490 ரூபாய். இதன் மெமரி 3GB + 32GBயாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஏ20 இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. அடுத்த வாரத்திலிருந்து விற்பனைக்கு வரும் என்று சாம்சங் அறிவித்துள்ளது. கேலக்ஸி ஏ ரக போன்களின் 2019ம் ஆண்டுக்கான ஸ்மார்ட்போனாக இது வெளியாகியுள்ளது. சாம்சங் கேலக்ஸி ஏ10, ஏ30, மற்றும் ஏ50 வகை போன்களின் வரிசையில் இந்த போனும் இந்திய சந்தையில் இடம் பிடித்துள்ளது. இது ரெட்மி நோட் 7க்கு போட்டியாக கருதப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி ஏ20-யின் இந்திய விலை:
இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ20ன் விலை 12,490 ரூபாய். இதன் மெமரி 3GB + 32GBயாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது கறுப்பு, நீலம் மற்றும் சிவப்பு வண்ணத்தில் கிடைக்கிறது. ஆன்லைனில் ஏப்ரல் 8ம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ளது. எந்த விதமான அறிமுக சலுகையையும் சாம்சங் அறிவிக்கவில்லை.
சாம்சங் கேலக்ஸி ஏ20 ரஷ்யாவில் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.
சாம்சங் கேலக்ஸி ஏ20 சிறப்பம்சங்கள்:
சாம்சங் கேலக்ஸி ஏ20 ஆன்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தில் இயங்குகிறது. வாட்டர் ப்ரூஃபுடன் கூடிய 6.4 இன்ச் ஹச்.டி சூப்பர் AMOLED டிஸ்ப்ளே. 1.6GHz ஆக்டகோர் Exynos 7884 ப்ராஸசர் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. 32 ஜிபி உள்ளக மெமரியும், 512 ஜிபி இணைக்கப்படும் மெமரியும் கொண்டுள்ளது.
செல்ஃபி கேமரா 8 மெகா பிக்ஸலுடனும், பின்பக்கத்தில் உள்ள இரு கேமராக்கள் முறையே 13 மற்றும் 5 மெகா பிகசலுடன் இயங்குகின்றன.
பையோமெட்ரிக் சென்சார், 4000 மில்லி ஆம்பியர் பேட்டரி, சி டைப் சார்ஜர் என வடிவமைக்கப்பட்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Oppo Reno 15 Series India Launch Timeline Leaked; Reno 15 Mini Also Expected to Debut