சாம்சங் கேலக்ஸி ஏ வகை போன்களான கேலக்ஸி ஏ50 மற்றும் ஏ30 ஏற்கெனவே அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் தற்போது சாம்சங் கேலக்ஸி ஏ20 தயாரிப்பு ரஷ்யாவில் வெளியாகியுள்ளது.
ஆக்டா கோர் எக்னாஸ் 7884SoC, இரண்டு பின்புற கேமராக்கள் மற்றும் 4,000mAh பேட்டரி பவரை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் சாம்சங்கின் ஆன்லைன் தளம் மற்றும் அத்தோரைசிட் ரீடெயில் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் இந்தியாவில் வெளியாகும் தேதி மற்றும் விலை பற்றிய தகவல் ஏதும் இன்னும் கசியவில்லை.
சாம்சங் கேலக்ஸி ஏ20 விலை:
ரஷ்யாவில் வெளியாகியுள்ள இந்த சாம்சங் கேலக்ஸி ஏ20, சுமார் ரூ.15,000 வரை மதிப்பிடப்படுகிறது. இந்த தயாரிப்பை சாம்சங் பிராண்டின் கடைகள் மற்றும் கூட்டணித் தளங்களில் இருந்து வாங்க முடிகிறது. உலக சந்தைகளில் அறிமுகமாகும் தேதி பற்றிய எவ்வித தகவலும் சாம்சங் தளத்தில் இடம் பெறவில்லை.
சாம்சங் கேலக்ஸி ஏ20 அமைப்புகள்:
6.4 இஞ்ச் ஹெச்டி திரை கொண்ட அமோலெட் பேனல் இந்த போனின் சிறப்பம்சமாகும். ஆக்டா கோர் எக்னாஸ் 7884SoC, வட்டர் டிராப் நாட்ச், 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி சேமிப்பு வசதி ஆகியவை போனுக்குக் கூடுதல் சிறப்புகளை சேர்க்கின்றன.
கேமரா வசதியைப் பொறுத்தவரை இந்த போனில் இரண்டு பின்புற கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 13 மற்றும் 5 மெகா பிக்சல் கேமராக்கள் இந்த போனின் பின்புறத்தில் அமைந்துள்ள நிலையில் முன்புறத்தில் செல்ஃபிக்காக 8 மெகா பிக்சல் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது.
பின்புறத்தில் ஃபிங்கர் பிரின்ட் சென்சார் மற்றும் சாம்சங் பே-விற்கான வசதி போன்ற பல சிறப்பு வசதிகளும் இந்த போனில் இடம் பெற்றுள்ளன. மேலும் இந்த போனில் 4,000mAh பேட்டரி மற்றும் வேகமாக சார்ஜ் செய்யும் வசதி போன்றவை இருக்கின்றன.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்