இந்தியாவில் இன்று சாம்சங் கேலக்ஸி ஏ10 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியாகிறது. ஆன்லைன் தளங்கள் மற்றும் ஆஃப்லைன் கடைகளிலும் விற்பனை செய்யப்படவுள்ள இந்த சாம்சங் கேலக்ஸி ஏ10, கடந்த மாதம் அறிமுகமானது. கேலக்ஸி ஏ30 மற்றும் ஏ50 போன்களுடன் அறிமுகமாகிய நிலையில் அவைகள் அறிமுகமாகிய சில நாட்களிலேயே விற்பனைக்கு வெளியாகின.
சாம்சங் கேலக்ஸி ஏ10 விலை:
இந்தியாவில் கடந்த மாதம் அறிமுகமான சாம்சங் கேலக்ஸி ஏ10, ரூ.8,490க்கு விற்பனைக்கு வந்துள்ளது. பட்ஜெட் தயாரிப்பான இந்த ஸ்மார்ட்போன் சிவப்பு, நீலம் மற்றும் கறுப்பு ஆகிய நிறங்களில் கிடைக்கிறது. அமேசான், ஃபிளிப்கார்ட், பேடிஎம் மற்றும் சாம்சங் ஆன்லைன் ஷாப் போன்ற தளங்களில் இந்த போனை வாங்கலாம்.
சாம்சங் கேலக்ஸி ஏ10 அமைப்புகள்:
இரண்டு சிம் கார்டு வசதிகளுடன் வெளியாகியுள்ள சாம்சங் கேலக்ஸி ஏ10, ஆண்ட்ராய்டு 9 பைய் மற்றும் ஓன் யுஐ மென்பொருள் கொண்டு இயங்குகிறது. 6.2 இஞ்ச் ஹெச்டி திரையைக் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் பொறுத்தப்பட்டுள்ள ஆக்டா கோர் எக்ஸ்னாஸ் 7884 SoC 2ஜிபி ரேமுடன் அதிவிரைவாக செயல்படுகிறது.
பின்புறத்தில் 13- மெகா பிக்சல் சென்சாரும், முன்புறத்தில் 5 மெகா பிக்சல் சென்சாரும் அமைந்துள்ளது. சாம்சங் கேலக்ஸி ஏ10 ஸ்மார்ட்போனில் 32ஜிபி சேமிப்பு வசதி உள்ளது. மேலும் 3,400mAh பேட்டரி பவரை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்