Samsung Galaxy A51 மற்றும் Galaxy A71 ஆகியவை ஜனவரி 29 புதன்கிழமை இந்தியாவில் அறிமுகமாகவுள்ளன. தென் கொரிய நிறுவனம் திங்களன்று ஒரு சமூக ஊடக பதிவின் மூலம் வெளியீட்டு அட்டவணையை அறிவித்துள்ளது. நினைவுகூர, Samsung Galaxy A51 மற்றும் Galaxy A71 ஆகியவை கடந்த மாதம் வியட்நாமில் வெளியிடப்பட்டன.
Samsung Galaxy A51 மற்றும் Galaxy A71 ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ அறிமுகத்தை அறிவிக்க, சாம்சங் இந்தியா ட்விட்டர் கணக்கு திங்களன்று 10 விநாடி வீடியோவை வெளியிட்டது. Galaxy A51 வெளியீட்டுக்கு இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளதாக டீஸர் வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், டீஸரில் வழங்கப்பட்ட இணைப்பில் ஒரு Galaxy A51 மற்றும் Galaxy A71 இரண்டையும் அறிமுகப்படுத்த பரிந்துரைக்கும் “galaxy-a55171”-ஐப் படிக்கும் URL நீட்டிப்பு உள்ளது.
Samsung, முதலில் Galaxy A51-ஐ இந்திய சந்தைக்குக் கொண்டு வரக்கூடும். அதே நேரத்தில் Galaxy A71-ஐ அடுத்த மாதத்தில் எப்போதாவது அறிமுகப்படுத்தும்.
இந்தியாவில் Samsung Galaxy A51 விலை சுமார் ரூ. 22,990-யாகவும், Galaxy A71 விலை ரூ. 29.990-யாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது. இருப்பினும், இரு போன்களின் அதிகாரப்பூர்வ இந்திய விலையை நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை. வியட்நாமில், Samsung Galaxy A51-ன் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை VND 7,990,000 (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 24,600)-க்கு கொண்டு வந்தது. இந்த போன் Prism Crush Black, White, Blue மற்றும் Pink கலர் ஆப்ஷன்களில் வருகிறது.
Galaxy A71, 128 ஜிபி ஆன்போர்டு ஸ்டோரேஜுடன் 6 ஜிபி மற்றும் 8 ஜிபி ரேம் வேரியண்டுகளைக் கொண்டுள்ளது மற்றும் Prism Crush Black, White, Blue மற்றும் Pink கலர் ஆப்ஷன்களில் வருகிறது.
டூயல்-சிம் (நானோ) Samsung Galaxy A51, One UI 2.0 உடன் Android 10-ல் இயங்குகிறது. இது 6.5-inch full-HD+ (1080x2400 pixels) Super AMOLED Infinity-O டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இந்த போன் 8GB RAM உடன் இணைக்கப்பட்டு octa-core SoC-யால் இயக்கப்படுகிறது. மேலும், f/2.0 lens உடன் 48-மெகாபிக்சல் முதன்மை சென்சார், f/2.0 ultra-wide-angle lens உடன் 12-மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் மற்றும் f/2.4 macro lens 5-மெகாபிக்சல் சென்சார், அதே போன்று f/2.2 lens உடன் 5-மெகாபிக்சல் depth சென்சார் ஆகியவை அடங்கிய குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும், இதில் f/2.2 lens உடன் 32-மெகாபிக்சல் செல்ஃபி கேமராவும் உள்ளது.
சாம்சங், 128GB ஆன்போர்டு ஸ்டோரேஜை Galaxy A51-க்கு வழங்குகிறது. இதனை microSD card வழியகா (512GB வரை) விரிவாக்கம் செய்யலாம். போனின் இணைப்பு விருப்பங்களில் 4G LTE, Wi-Fi, Bluetooth, GPS/ A-GPS மற்றும் USB Type-C port ஆகியவை அடங்கும். இதில், in-display fingerprint சென்சாரும் உள்ளது. தவிர, இந்த போன் 15W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
Galaxy A51-ஐப் போலவே, Samsung Galaxy A71-ம் One UI 2.0 உடன் Android 10-ல் இயங்குகிறது. இருப்பினும், இந்த போன் 6.7-inch full-HD+ (1080x2400 pixels) Super AMOLED Infinity-O டிஸ்பிளேவுடன் வருகிறது. இது 6GB மற்றும் 8GB RAM ஆப்ஷனுடன் இணைக்கப்பட்டு octa-core SoC-யால் இயக்கப்படுகிறது. இதன் குவாட் ரியர் கேமரா அமைப்பில் f/1.8 lens உடன் 64-மெகாபிக்சல் முதன்மை சென்சார், f/2.2 ultra-wide-angle lens உடன் 12-மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார், f/2.2 lens உடன் 5-மெகாபிக்சல் depth சென்சார் மற்றும் f/2.4 macro lens உடன் 5-மெகாபிக்சல் சென்சார் ஆகியவை அடங்கும். இந்த ஸ்மார்ட்போன் f/2.2 lens உடன் 32-மெகாபிக்சல் செல்ஃபி கேமராவையும் கொண்டுள்ளது
Galaxy A71, 128GB ஆன்போர்டு ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது. இதனை microSD card வழியாக (512GB வரை) விரிவாக்கம் செய்யலாம். போனின் இணைப்பு விருப்பங்களில் 4G LTE, Wi-Fi, Bluetooth, GPS/ A-GPS மற்றும் USB Type-C port ஆகியவை அடங்கும். தவிர, இந்த போன் in-display fingerprint சென்சாரைக் கொண்டுள்ளது. மேலும், 4,000mAh பேட்டரியுடன் வருகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்