இந்தியாவில் Samsung Galaxy A51-ன் ஒரே 6GB RAM + 128GB ஆன்போர்டு ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ. 23,999-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Samsung Galaxy A51, முன்பக்கத்தில் Infinity-O டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது
Samsung Galaxy A51 இந்த மாத தொடக்கத்தில் இந்திய சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனை நேற்று நள்ளிரவு முதல் விற்பனை செய்து வருகிறது. நினைவுகூர, Samsung Galaxy A51 கடந்த மாதம் வியட்நாமில் வெளியிட்டது.
இந்தியாவில் Samsung Galaxy A51-ன் ஒரே 6GB RAM + 128GB ஆன்போர்டு ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ. 23,999-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் விற்பனை நேற்று நள்ளிரவு தொடங்கியது. இந்த ஸ்மார்ட்போன் சில்லறை கடைகள், சாம்சங் ஓபரா ஹவுஸ், சாம்சங் இ-ஷாப் மற்றும் முன்னணி ஆன்லைன் போர்ட்டல்களில் விற்பனை செய்யப்படும். அமேசான் பே வழியாக போனை வாங்கினால் அறிமுக சலுகைகளில் 5 சதவீதம் கேஷ்பேக் அடங்கும். கூடுதலாக, வாங்குபவர்களுக்கு ஒரு முறை இலவச திரை மாற்றீட்டையும் நிறுவனம் வழங்குகிறது.
டூயல்-சிம் (நானோ) Samsung Galaxy A51, 20:9 aspect ratio மற்றும் in-display fingerprint சென்சாருடன் 6.5-inch full-HD+ (1080x2400 pixels) Super AMOLED Infinity-O டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. ஹூட்டின் கீழ், இந்த ஸ்மார்ட்போன் 6GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டு octa-core Exynos 9611 SoC-யால் இயக்கப்படுகிறது. இதனை microSD card வழியகா (512GB வரை) விரிவாக்கம் செய்யலாம்.
கேமராக்களைப் பொறுத்தவரை, Galaxy A51-ல், f/2.0 aperture உடன் 48-மெகாபிக்சல் முதன்மை சென்சார், f/20 aperture உடன் 12-மெகாபிக்சல் ultra-wide-angle கேமரா, f/2.4 aperture உடன் 5-மெகாபிக்சல் மேக்ரோ கேமரா மற்றும் f/2.2 aperture உடன் 5-மெகாபிக்சல் depth சென்சார் ஆகியவை அடங்கிய குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. செல்ஃபிகளுக்காக, முன்புறத்தில், f/2.2 aperture உடன் 32-மெகாபிக்சல் கேமராவைக் கொண்டுள்ளது.
Samsung Galaxy A51, One UI 2.0 உடன் Android 10-ல் இயங்குகிறது. தவிர, இந்த போன் 15W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. Samsung Galaxy A51-ன் இணைப்பு விருப்பங்களில் 4G VoLTE, Wi-Fi, Bluetooth, GPS/ A-GPS மற்றும் USB Type-C port ஆகியவை அடங்கும்.
Samsung Galaxy A51, Prism Crush Black, Prism Crush White மற்றும் Prism Crush Blue ஆகிய மூன்று கலர் ஆப்ஷன்களில் வழங்கப்படுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Cult Kinetic Massage Gun Launched in India With 3,800 RPM BLDC Motor
Dyson V16 Piston Animal Vacuum Cleaner Launched in India With Anti-Tangle Cleaner Head: Price, Specifications