இந்தியாவில் வெளியானது Samsung Galaxy A51...!

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
இந்தியாவில் வெளியானது Samsung Galaxy A51...!

Samsung Galaxy A51 புதிய டிஸ்ப்ளே மூலம் புதிய தோற்றத்தையும், உணர்வையும் தருகிறது

ஹைலைட்ஸ்
  • Samsung Galaxy A51 ஆரம்பத்தில் வியட்நாமில் அறிமுகப்படுத்தப்பட்டது
  • Samsung Galaxy A50-க்கு அடுத்தபடியாக இந்த போன் வருகிறது
  • Samsung Galaxy A51, octa-core Exynos 9611 SoC உடன் வருகிறது
விளம்பரம்

Samsung Galaxy A51 இந்தியாவில் சமீபத்திய கேலக்ஸி ஏ-சீரிஸ் போனாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் Infinity-O டிஸ்ப்ளே (நிறுவனம் hole-punch டிஸ்பிளே வடிவமைப்பிற்காக பேசுகிறது) மற்றும் குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. Realme X2, Redmi K20 மற்றும் Vivo V17 போன்றவற்றைப் பெற, புதிய மாடலில் சாம்சங் புதிய தோற்றத்தையும் வழங்கியுள்ளது.


இந்தயாவில் Samsung Galaxy A51-ன் விலை, வெளியீட்டு சலுகைகள்:

இந்தியாவில் Samsung Galaxy A51-ன் ஒரே 6GB RAM + 128GB ஆன்போர்டு ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ. 23,999-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த போன் Blue, White, Black Prism Crush கலர் ஆப்ஷன்களில் வருகிறது. தவிர, இது முன்னணி e-retailers, offline retailers, Samsung.com மற்றும் Samsung Opera House மூலம் ஜனவரி 31 முதல் விற்பனைக்கு வரும்.

Samsung Galaxy A51-ன் வெளியீட்டு சலுகைகளில், அமேசான் பேவைப் பயன்படுத்தி போன் மூலம் பணம் செலுத்தினால் 5 சதவீதம் வரை கேஷ்பேக் அடங்கும். கூடுதலாக, நிறுவனம் Galaxy A51 வாங்குபவர்களுக்கு ஒரு முறை இலவச திரை மாற்றீட்டை வழங்கும்.

Galaxy A51 இந்தியாவில் அறிமுகமான அதே 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண், வியட்நாமில் VND 7,990,000 (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 24,600)-க்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

Play Video


Samsung Galaxy A51-ன் விவரக்குறிப்புகள்:

டூயல்-சிம் (நானோ) Samsung Galaxy A51, One UI 2.0 உடன் Android 10-ல் இயங்குகிறது. இது 20:9 aspect ratio மற்றும் in-display fingerprint சென்சாருடன் 6.5-inch full-HD+ (1080x2400 pixels) Super AMOLED Infinity-O டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. ஹூட்டின் கீழ், இந்த போன் 8GB RAM உடன் இணைக்கப்பட்டு octa-core Exynos 9611 SoC-யால் இயக்கப்படுகிறது. மேலும், f/2.0 lens உடன் 48-மெகாபிக்சல் முதன்மை சென்சார், f/20 aperture உடன் 12-மெகாபிக்சல் ultra-wide-angle கேமரா, f/2.4 macro lens உடன் 5-மெகாபிக்சல் மேக்ரோ கேமரா மற்றும் f/2.2 lens உடன் 5-மெகாபிக்சல் depth சென்சார் ஆகியவை அடங்கிய குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த போன் f/2.2 lens உடன் 32-மெகாபிக்சல் செல்ஃபி கேமரா சென்சாரையும் கொண்டுள்ளது.

Samsung, 128GB ஆன்போர்டு ஸ்டோரேஜை Galaxy A51-க்கு வழங்குகிறது. இதனை microSD card வழியகா (512GB வரை) விரிவாக்கம் செய்யலாம். Samsung Galaxy A51-ன் இணைப்பு விருப்பங்களில் 4G VoLTE, Wi-Fi, Bluetooth, GPS/ A-GPS மற்றும் USB Type-C port ஆகியவை அடங்கும். தவிர, இந்த போன் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Bright, vivid display
  • Clean, feature-rich software
  • Good battery life
  • Bad
  • Biometric authentication isn’t very quick
  • Underwhelming performance for the price
  • Average low-light camera performance
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »