சாம்சங் கேலக்ஸி ஏ 51 8 ஜிபி ரேம் வேரியண்டின் விலை ரூ.27,999 ஆகும்.
சாம்சங் கேலக்ஸி ஏ 51 ஜனவரி பிற்பகுதியில் இந்தியாவில் ஒற்றை, 6 ஜிபி ரேம் ஆப்ஷனில் அறிமுகப்படுத்தப்பட்டது
சாம்சங் கேலக்ஸி ஏ 51 இந்த ஆண்டு ஜனவரியில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஜனவரி 2020 முதல் மார்ச் வரை, உலகளவில் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போன் இதுவாகும். அறிமுகப்படுத்தப்பட்ட நேரத்தில் இந்த தொலைபேசி 6 ஜிபி ரேம் கொண்டிருந்தது. இந்த முறை சாம்சங் இந்த போனை 8 ஜிபி ரேம்-க்கு கொண்டு வந்துள்ளது. இந்த போனில் இன்பினிட்டி-ஓ டிஸ்ப்ளே உள்ளது. போனின் பின்புறத்தில் நான்கு கேமராக்கள் உள்ளன.
8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட Samsung Galaxy A51 விலை இந்தியாவில் ரூ.27,999 ஆகும். இந்த போன் கருப்பு, நீலம் மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கிறது.
டூயல்-சிம் சாம்சங் கேலக்ஸி ஏ 51 நிறுவனத்தின் ஒன்யூஐ 2.0 உடன் Android 10-ல் இயங்கும். இந்த போனில் 6.5 இன்ச் சூப்பர் அமோலேட் ஹோல்-பஞ்ச் டிஸ்ப்ளே உள்ளது. போனின் உள்ளே ஒரு எக்ஸினோஸ் 9611 சிப்செட், 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஏ 51 பின்புறத்தில் நான்கு கேமராக்கள் உள்ளன. இதில் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 12 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா, 5 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவை அடங்கும். செல்ஃபிக்களை எடுக்க 32 மெகாபிக்சல் கேமரா முன்பக்கத்தில் உள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஏ 51-ல் 4,500 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. இது 25W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. இணைப்பிற்காக, இந்த போனில் 4 ஜி வோல்டிஇ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளது.
Is Samsung Galaxy A51 a worthy Redmi K20 Pro rival? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
Shambala Now Streaming Online: What You Need to Know About Aadi Saikumar Starrer Movie
Microsoft CEO Satya Nadella Says AI’s Real Test Is Whether It Reaches Beyond Big Tech: Report