சாம்சங் கேலக்ஸி A10s 3ஜிபி ரேம் வேரியண்ட் இந்தியாவில் இன்று முதல் கிடைக்கிறது. சாம்சங் கேலக்ஸி A10 2ஜிபி ரேம் வேரியண்ட் விற்பனையை தொடங்கிய சில வாரங்களில் சாம்சங் இந்த புதிய வேரியண்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போன், டூயல் பேக் கேமரா, நாட்ச் டிஸ்பிளே டிசைனை கொண்டது. கேலக்ஸி A10 மாடலில், 3,4001mAh பேட்டரி திறன் கொண்டிருந்த நிலையில், கேலக்ஸி A10s 4,000 mAh பேட்டரி திறன் கொண்டுள்ளது.
இந்தியாவில், சாம்சங் கேலக்ஸி A10s 3ஜிபி +32ஜிபி வேரியண்டின் விலை ரூ.10,499 ஆகும். இந்த போன் இந்தியாவில் இன்று முதல் அனைத்து ஆன்லைன் தளங்களிலும், நேரடி சில்லறை விற்பனை நிலையங்களிலும் கிடைக்கும் என சாம்சங் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த போன், பிளாக், ப்ளூ, மற்றும் கிரின் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது.
இந்தியாவில் முதலில் சாம்சங் கேலக்ஸி A10s, 2ஜிபி வேரியண்ட்டை அறிமுகப்படுத்தியது. அதன் ஆரம்ப விலையாக, ரூ.9,499க்கு விற்பனை செய்யப்படுகிறது.
டூயல் சிம் (நானோ) ஆதரவு கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் ஆனது ஆண்ட்ராய்டு 9 பை அடைப்படையிலான நிறுவனத்தின் சொந்த ஸ்கின் கொண்டு இயங்குகிறது. இது 720 x 1520 பிக்சல்கள் கொண்ட 6.2 இன்ச் அளவிலான எச்டி+ இன்ஃபினிட்டி-வி டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. ஆக்டா கோர் பிராஸசர் கொண்ட இந்த போன் 2ஜிபி மற்றும் 3ஜிபி வேரியண்டில் கிடைக்கிறது.
வீடியோ மற்றும் புகைப்படங்களை பொறுத்தவரையில், சாம்சங் கேலக்ஸி A10s போனில், 13மெகா பிக்செல் பிரைமரி சென்சாரும், 2 மெகா பிக்செல் செகண்டரி சென்சாருமாக பின்பக்கம் டூயல் கேமரா கொண்டுள்ளது. முன்பக்கம் 8 மெகா பிக்செல் சென்சார் கொண்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி A10s 32ஜிபி வேரியண்டை மைக்ரோ எஸ்டி கார்டு கொண்டு (512ஜிபி) வரை விரிவுப்படுத்திக்கொள்ளலாம். மேலும், போனின் பின்புறம் கைரேகை சென்சாரும் கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்