சாம்சங் கேலக்ஸி A30, சாம்சங் கேலக்ஸி A20 மற்றும் சாம்சங் கேலக்ஸி A10 ஆகிய ஸ்மார்ட் போன்களின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.
விலை குறைப்புப்படி, சாம்சங் கேலக்ஸி A10 ரூ.7990-இல் இருந்து ஆரம்பிக்கிறது. இதன் ஒரிஜினல் விலை ரூ.8490 ஆகும்.
சாம்சங் கேலக்ஸி A30, சாம்சங் கேலக்ஸி A20 மற்றும் சாம்சங் கேலக்ஸி A10 ஆகிய ஸ்மார்ட் போன்களின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. இது குறித்து செய்திக் குறிப்பு வெளியிட்டு தகவல் தெரிவித்துள்ளது சாம்சங் நிறுவனம். விலை குறைக்கப்பட்ட போன்கள் சாம்சங் ஆன்லைன் தளம் மற்றும் அமேசான் ஆன்லைன் தளங்களில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல டாடா க்ளிக், க்ரோமா, பேடிம் மால் கடைகளிலும் இந்த விலை குறைப்பு செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி A30 மற்றும் சாம்சங் கேலக்ஸி A10 ஆகிய போன்கள் மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. சாம்சங் கேலக்ஸி A20, சென்ற மாதம் இந்திய சந்தைக்கு வந்தது. இந்த 3 போன்களுக்கும் இப்போதுதான் முதன்முறையாக விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது.
விலை குறைப்புப்படி, சாம்சங் கேலக்ஸி A10 ரூ.7990-இல் இருந்து ஆரம்பிக்கிறது. இதன் ஒரிஜினல் விலை ரூ.8490 ஆகும். அதேபோல சாம்சங் கேலக்ஸி A20, 12490 ரூபாயிலிருந்து 11490 ஆக குறைக்கப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி A30, 16990 ரூபாயிலிருந்து, 15490 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி A70, இந்தியாவில் சில நாட்களுக்கு முன்னர்தான் விற்பனைக்கு வந்தது. இந்நிலையில் இந்த 3 போன்களுக்கும் விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் சியோமி மற்றும் ரியல்மி நிறுவனங்கள் பல பட்ஜெட் போன்களை வெளியிட்டதைத் தொடர்ந்து சாம்சங் நிறுவனம், அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் விலை குறைப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.
சாம்சங் கேலக்ஸி A30 போனில், 6.4 இன்ச் முழு எச்.டி+ திரை, சூப்பர் ஆமோலெட் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே, ஆக்டோ கோர் எக்சினோஸ் 7904 எஸ்.ஓ.சி, 4 ஜிபி ரேம், 4000 எம்.ஏ.எச் பேட்டரி உள்ளிட்ட வசதிகளைப் பெற்றுள்ளது. டூயல் ரியர் கேமரா மற்றும் 5 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா வசதிகளையும் சாம்சங் கேலக்ஸி A30 கொண்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி A20 போனில், 6.4 இன்ச் முழு எச்.டி+ திரை, ஆக்டோ கோர் எக்சினோஸ் 7884 எஸ்.ஓ.சி, 3 ஜிபி ரேம், 4000 எம்.ஏ.எச் பேட்டரி உள்ளிட்ட வசதிகளைப் பெற்றுள்ளது. டூயல் ரியர் கேமரா மற்றும் 8 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா வசதிகளையும் சாம்சங் கேலக்ஸி A20 கொண்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி A10 போனில், 6.2 இன்ச் முழு எச்.டி+ திரை, ஆக்டோ கோர் எக்சினோஸ் 7884 எஸ்.ஓ.சி, 2 ஜிபி ரேம், 3400 எம்.ஏ.எச் பேட்டரி உள்ளிட்ட வசதிகளைப் பெற்றுள்ளது. 13 மெகா பிக்சல் பின்புற கேமரா மற்றும் 5 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா வசதிகளையும் சாம்சங் கேலக்ஸி A10 கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
Redmi Note 15 Pro 5G India Launch Seems Imminent After Smartphone Appears on Geekbench