சாம்சங்கின் 32 மெகா பிக்சல் ISOCELL ப்ரைட் GD1 இமேஜ் சென்சார்தான் செல்ஃபி கேமராவுக்குப் பயன்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
ஸ்னாப்டிராகன் 625 எஸ்.ஓ.சி, 3ஜிபி ரேம் போன்ற வசதிகளை ரெட்மி Y3 பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரெட்மி Y3 ஸ்மார்ட் போன் நாளை வெளியாகிறது. இந்நிலையில் கீக்பென்ச் தளத்தில் போன் குறித்து சில முக்கியமான தகவல்கள் கசிந்துள்ளன. தற்போது வெளியாகியுள்ள தகவல்களுக்கு எந்தவித ஆதாரமும் இல்லை. இன்னும் ஒரு நாளில் போனை சியோமி நிறுவனமே அதிகாரபூர்வமாக வெளியிட உள்ளது. இருப்பினும் சமீப காலத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் போன் ரெட்மி Y3 என்பதால், கசிந்த தகவல்கள் குறித்து பார்ப்போம்.
ரெட்மி Y3-யில் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
ஸ்னாப்டிராகன் 625 எஸ்.ஓ.சி, 3ஜிபி ரேம் போன்ற வசதிகளை ரெட்மி Y3 பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சியோமி நிறுவனம் ஏற்கெனவே போனில் 32 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா இருக்கும் என்பதை உறுதி செய்துவிட்டது. அதேபோல சமீபத்தில் வெளியான டீசரில் 4,000 எம்.ஏ.எச் பேட்டரி இருப்பதையும் யூகிக்க முடிகிறது. போனில் கிரேடியன்ட் ஃபினிஷ் மற்றும் வாட்டர் ட்ராப் நாட்ச் டிஸ்ப்ளே இருக்கும் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
சாம்சங்கின் 32 மெகா பிக்சல் ISOCELL ப்ரைட் GD1 இமேஜ் சென்சார்தான் செல்ஃபி கேமராவுக்குப் பயன்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல், வெகு நேரம் பேட்டரி திறன் இருப்பதற்கு சியோமி நிறுவனம் இந்த போனில் பிரத்யேக சாதனத்தைப் பொருத்தி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து சியோமி நிறுவனம் சார்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றாலும், 4000 எம்.ஏ.எச் பேட்டரியை Y3 போன் பெற்றிருக்கலாம் எனப்படுகிறது.
ரெட்மி Y3 விலை:
ரெட்மி Y2 மற்றும் Y1 ஆகிய போன்கள் முறையே 9,999 ரூபாய் மற்றும் 8,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. எனவே ரெட்மி Y3 போனின் விலையும் இதை ஒத்திருக்கலாம் எனப்படுகிறது. இந்த போன் ரெட்மி நோட் 7 மற்றும் ரியல்மி U1 ஆகிய போன்களுடன் சந்தையில் போட்டிபோடும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy Z TriFold Price Said to Be Lower Than Previously Anticipated