ரெட்மியின் புதிய வீடியோ டீஸர், ஒரு மர்மமான தயாரிப்பின் காட்சிகளைக் காட்டுகிறது
Photo Credit: Twitter/ Manu Kumar Jain
ஜியோமியின் இந்தியத் தலைவர் மனு குமார் ஜெயின் இந்தியாவில் வரவிருக்கும் ரெட்மி சாதன அறிமுகத்திற்கான மற்றொரு டீஸரை வெளியிட்டுள்ளார். இந்த முறை வீடியோ டீஸர் இது போனாக இருக்கக்கூடாது என்று தெரிவிக்கிறது. இந்த டீஸர், சாதனத்தின் பார்வையை நமக்கு அளிக்கிறது. இது முன்பை விட குழப்பத்தை ஏற்படுத்துகிறது. மேலும், தலைப்பு அதிக சக்தியையும் ‘நலினமான வடிவமைப்பையும்' பரிந்துரைக்கிறது. இவை அனைத்தும் இந்தியாவில் ரெட்மி சீரிஸின் கீழ் சியோமி ஒரு புதிய power bank-ஐத் தொடங்கக்கூடும் என்று யூகிக்க வழிவகுக்கிறது. இது புளூடூத் ஸ்பீக்கர் போன்ற முற்றிலும் புதிய தயாரிப்பு வகையை கேலி செய்வதாக இருக்கலாம் அல்லது இந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட RedmiBook ஆகவும் இருக்கலாம்.
ஜெயின் சமீபத்திய ட்வீட் (tweet), இந்தியாவில் வரவிருக்கும் ரெட்மி சாதன அறிமுகத்திற்கான புதிய டீஸரைக் கொண்டுவருகிறது. டீஸரின் தலைப்பு, தயாரிப்பு ‘மென்மையான, நளினமான, சக்திவாய்ந்ததாக' இருக்கும் என்று அறிவுறுத்துகிறது. மேலும் அவர் ‘சக்தி ஒரு புதிய தோற்றத்தைக் கொண்டுள்ளது' என்ற டேக் லைனை பகிர்ந்துள்ளார். ட்வீட்டில் இணைக்கப்பட்ட வீடியோ, சாதனத்தின் பார்வைகளைக் காட்டுகிறது. மேலும், சிறியதாகக் காணப்பட்டாலும், வரவிருக்கும் போனை அறிமுகப்படுத்துவதை (launch of an upcoming phone) நிறுவனம் கிண்டல் செய்வது போல் தெரியவில்லை. சாதனத்தின் பார்வைகள் இது ஒரு power bank அல்லது புளூடூத் ஸ்பீக்கராக இருக்கலாம் என்று கூறுகின்றன. இது உண்மையாக இருந்தால் ரெட்மி இந்தியா பிராண்டிங்கின் கீழ் தொடங்கப்படும் முதலாவதாகும்.
இந்நிறுவனம் ஒரு சில power banks-ஐயும், புளூடூத் ஸ்பீக்கர்களையும் கூட (even Bluetooth speakers) சீனாவில் ரெட்மி பிராண்டிங்கின் கீழ் அறிமுகப்படுத்தியுள்ளது (launched). மேலும், ஜியோமி இந்தியாவில் ஒன்றை கிடைக்கச் செய்யும் என்று எதிர்பார்க்கலாம். மாற்றாக, நிறுவனம் இந்திய பார்வையாளர்களுக்காக முற்றிலும் புதிய தயாரிப்பு வரிசையை தயாரித்திருக்கலாம், ஏனெனில் இது கடந்த காலங்களில் அறியப்பட்டது.
RedmiBook சீரிஸை இந்தியாவில் தொடங்க ஜியோமி தயாராகி வருவதாகவும் சமீபத்திய தகவல்கள் (Recent reports) தெரிவிக்கின்றன. RedmiBook வர்த்தக முத்திரை இந்தியாவில் சமீபத்தில் ஜியோமி மடிக்கணினி சந்தையில் நுழைவதைக் குறிக்கிறது. இந்தியாவில் RedmiBook சீரிஸின் வருகையை ஜெயின் கேலி செய்கிறார். ஆனால், நிச்சயமாக இது எங்கள் முடிவில் இருந்து வந்த யூகமாகும். அடுத்த ரெட்மி சீரிஸில் எதை வெளியிடும் என்று கீழேயுள்ள கருத்துகளுக்குச் (comments) சென்று நீங்கள் நினைப்பதை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்!
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.