8ஜிபி ரேம் உடன் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் விற்பனைக்கு வந்தது!

8ஜிபி ரேம் உடன் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் விற்பனைக்கு வந்தது!

8ஜிபி ரேம் வரை கொண்ட ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் விற்பனைக்கு வந்தது!

ஹைலைட்ஸ்
 • Redmi Note 9 Pro Max is priced in India starting at Rs. 16,999
 • The phone is equipped with a 64-megapixel quad camera setup
 • Redmi Note 9 Pro Max will go on sale at 12pm (noon) IST

இந்தியாவில் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் மீண்டும் விற்பனைக்கு வந்தது. இந்த ஸ்மார்ட்போனானது அமேசான் மற்றும் எம்ஐ.காமில் இன்று நண்பகல் முதல் விற்பனையில் கிடைக்கிறது. இந்த ரெட்மி நோட் 9 ப்ரோ 3 நிறங்களில் கிடைக்கிறது. ஆரோரா புளூ, கிளேசியர் வைட், இன்டெர்ஸ்டெல்லார் பிளாக் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது. இதில் சிறப்பம்சமாக ஸ்னாப்டிராகன் 720ஜி ப்ராஸர், 8ஜிபி ரேம் கொண்டுள்ளது. இது 64 மெகா பிக்செல் குவாட் கேமரா வசதியுடன், 6.67 இன்ச் எச்.டி டிஸ்பிளேயும், வாட்டர் டிராப் நாட்ச் ஸ்டைலும் கொண்டுள்ளது.

இந்தியாவில் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் விலை, ஆஃபர்

இந்தியாவில் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் விலையானது சமீபத்தில் 6ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடலுக்கு ரூ.500 உயர்ந்து தற்போது ரூ.16,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. 6ஜி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட் விலை ரூ.18,499 ஆகும். 8ஜிபி ரேம் +128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.19,999ஆகும். ரெட்மி நோட் ப்ரோ மேக்ஸ் 2வது முறையாக விலை உயர்ந்துள்ளது. இதனால், அறிமுகமான போது இருந்த விலையை விட தற்போது ரூ.2000 வரை கூடுதலாகி உள்ளது. 

ரெட்மி 9 ப்ரோ மேக்ஸ் விற்பனையானது நண்பகல் முதல் அமேசான் மற்றும் எம்ஐ.காமில் விற்பனையில் உள்ளன. இதில், ஏர்டெல் டபுள் டேட்டா பலனாக ரூ.298 மற்றும் ரூ.398 மதிப்பிலான அன்லிமிடெட் பேக்குகள் ஆஃபராக வழங்கப்பட்டுள்ளது. அமேசான் வழியாக போனை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் விலையில்லா இஎம்ஐ ஆப்ஷன்களையும் தேர்ந்தெடுக்கலாம். ப்ரைம் வாடிக்கையாளர்கள் அமேசான் பே வழியாக பணம் செலுத்தும் போது கூடுதலாக 5 சதவீதம் சலுகை பெறலாம். 


ரெட்மி 9 ப்ரோ மேக்ஸ் சிறப்பம்சங்கள்

ரெட்மி நோட் 9 புரோ மேக்ஸ் 6.67 அங்குல முழு எச்டி+(1,080x2,400பிக்சல்கள்) ஐபிஎஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 720 ஜி SoCல் இயக்கப்படுகிறது, இதில் 8ஜிபி ரேம் வரை இணைக்கப்பட்டுள்ளது. மைக்ரோ எஸ்.டி கார்டு (512 ஜிபி வரை) வழியாக விரிவாக்கக்கூடிய 128 ஜிபி உள் சேமிப்பிடத்தையும் இந்த போன் கொண்டுள்ளது. 

ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸில் குவாட் ரியர் கேமரா அமைப்பில் 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா, அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸுடன் 8 மெகாபிக்சல்சென்சார், மேக்ரோ லென்ஸுடன் 5 மெகாபிக்சல் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் ஆகியவை உள்ளன. செல்பி மற்றும் வீடியோ அழைப்பிற்காக, சியோமி துணை பிராண்ட் ரெட்மி 32 மெகாபிக்சல் முன் கேமராவை வழங்கியுள்ளது.

பேட்டரியைப் பொறுத்தவரை, ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் 5,020 எம்ஏஎச் உடன் 33W வேகமான சார்ஜிங்கிற்கான ஆதரவைக் கொண்டுள்ளது. இது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சாருடன் வருகிறது. தொலைபேசியில் இணைப்பு விருப்பங்களில் 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் வி 5.0, அகச்சிவப்பு (ஐஆர்), யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் கொண்டுள்ளது..


Is Redmi Note 9 Pro Max the best affordable camera phone in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

 • Design
 • Display
 • Software
 • Performance
 • Battery Life
 • Camera
 • Value for Money
 • Good
 • Powerful processor
 • Bundled fast charger
 • All-day battery life
 • Good cameras
 • Bad
 • Big and bulky
 • Preinstalled bloatware
 • Average low-light video recording
Display 6.67-inch
Processor Qualcomm Snapdragon 720G
Front Camera 32-megapixel
Rear Camera 64-megapixel + 8-megapixel + 5-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 64GB
Battery Capacity 5020mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी
பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
 
 

விளம்பரம்

Advertisement

#சமீபத்திய செய்திகள்
 1. வாய்ஸ் கன்ட்ரோலுடன் சூப்பரான Mi ஸ்மார்ட் பல்பு அறிமுகம்!
 2. Realme Narzo 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகின! விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!!
 3. பட்ஜெட் விலையில் ரியல்மி நார்சோ 20 சீரிஸ் நாளை அறிமுகம்!
 4. சாம்சங் கேலக்ஸி F சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்!
 5. OnePlus 8T அக்டோபர் 14 அறிமுகம்? முழு விவரங்கள்
 6. Moto E7 Plus ஸ்மார்ட்போன் செப்.23 அறிமுகம்!
 7. Google Play இலிருந்து Paytm செயலி நீக்கம்: விதிகளை மீறியதாக கூகுள் குற்றச்சாட்டு!
 8. வந்துவிட்டது Redmi 9A ஸ்மார்ட்போன்! விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!
 9. அடுத்த வாரம் Realme C17 ஸ்மார்ட்போன் அறிமுகம்! எவ்வளவு ரூபாய் இருக்கும்?
 10. அமேசான் பொருட்கள் தரம் குறைந்தவை, எளிதில் தீப்பிடிக்கின்றன.. ஆய்வில் தகவல்
© Copyright Red Pixels Ventures Limited 2021. All rights reserved.
Listen to the latest songs, only on JioSaavn.com