இந்தியாவில் Redmi Note 8 அதன் வாராந்திர ஃபிளாஷ் விற்பனையின் ஒரு பகுதியாக இன்று விற்பனைக்கு வரும். இது ஜியோமியின் பட்ஜெட் குவாட் கேமரா ஸ்மார்ட்போன் ஆகும். மேலும், Redmi Note 8 Pro-வுடன் கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்தியாவில் Redmi Note 8-ன் விலை மற்றும் விற்பனை சலுகைகள்:
Redmi Note 8 நாட்டில் இரண்டு மெமரி மற்றும் ஸ்டோரேஜ் வகைகளில் கிடைக்கிறது. 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ. 9,999 ஆகவும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ. 12.999 ஆகவும் விலையிடப்படுள்ளது. இரண்டு வகைகளும் இன்று மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வரும். மேலும், Amazon India, Mi.com மற்றும் Mi Home stores வழியாக வாங்குவதற்கு கிடைக்கும். இந்த போன் Moonlight White, Neptune Blue மற்றும் Space Black நிறங்களில் கிடைக்கும்.
விற்பனை சலுகைகளைப் பொறுத்தவரை, Redmi Note 8 அமேசான் இந்தியாவில், ஏர்டெல் இரட்டை டேட்டா சலுகையுடன் ரூ. 249 மற்றும் ரூ. 349 ப்ரீபெய்ட் ரீசார்ஜ்கள், எச்.டி.எஃப்.சி வங்கி டெபிட் கார்டுகளில் ரூ. 500 வரை 10 சதவீதம் கேஷ்பேக், எச்எஸ்பிசி கேஷ்பேக் கார்டில் 5 சதவீதம் உடனடி கேஷ்பேக் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி கடன் ஈ.எம்.ஐ பரிவர்த்தனைகளில் ரூ. 1,500 வரை 5 சதவீதம் தள்ளுபடியை வழங்குகிறது. ஏர்டெல்லில் 1120 ஜிபி 4 ஜி டேட்டாவுடன், Redmi Note 8-ஐ Mi.com ஜியோமி வழங்குகிறது.
Redmi Note 8-ன் விவரக்குறிப்புகள்:
Redmi Note 8-வில் 6.39-inch full-HD+ (1080x2280 pixels) டிஸ்பிளே காணப்படுகிறது. 6GB of RAM வரை இணைக்கப்பட்டு, octa-core Qualcomm Snapdragon 665 SoC-யால் இயங்குகிறது. குவாட் ரியர் கேமரா அமைப்பில் (48-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel) கேமராவும், முன்பக்கத்தில் 13-megapixel கேமராவும் உள்ளது. பிரத்யேக microSD card (512 ஜிபி வரை) வழியாக விரிவாக்கக்கூடிய 128 ஜிபி வரை ஆன்போர்டு ஸ்டோரேஜ் உள்ளது. 18W fast சார்ஜிங் ஆதரவுடன் 4,000mAh பேட்டரியை உள்ளடக்கியதோடு, 158.3x75.3x8.35mm மற்றும் 188 கிராம் எடை கொண்டதாகும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்