சியோமி நிறுவனம், தன் அடுத்த 48 மெகாபிக்சல் கேமரா கொண்ட 'ரெட்மீ நோட் 7S' ஸ்மார்ட்போனை இந்தியாவில் இன்று அறிமுகப்படுத்தவுள்ளது. கடந்த வாரம், இந்த ஸ்மார்ட்போனின் அறிமுகம் பற்றிய தகவலை கடந்த வாரம் வெளியிட்ட சியோமி நிறுவனம், மே 20-ஆம் தேதி இந்த ஸ்மார்ட்பொனை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் கூறியிருந்தது. முன்னதாக, இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மனு குமார் ஜெய்ன், இந்த ஸ்மார்ட்போன் 48 மெகாபிக்சல் கேமரா கொண்டதாக இருக்கும் என அறிவித்திருந்தார். இந்த ஸ்மார்ட்போன் சிவப்பு நிற வண்ணத்தில் வெளியாகும் என்ற தகவலும் உறுதியாகியுள்ளது.
'ரெட்மீ நோட் 7S': எங்கு, எப்போது வெளியாகவுள்ளது?
இதற்கென தனியாக எந்த ஒரு நிகழ்வையும் ஏற்பாடு செய்யாத சியோமி நிறுவனம், தனது இணையதளமான Mi.com - லேயே, இந்த ஸ்மார்ட்போனின் அறிமுகத்தை நேரலையில் நடத்தவுள்ளது. இந்திய நேரப்படி, மதியம் 12 மணிக்கு இந்த நேரலை துவங்கவுள்ளது. கேட்ஜெட்ஸ் 360-யும் இந்த ஸ்மார்ட்போன் குறித்த தகவல்களை உடனுக்குடன் வெளியிடவுள்ளது.
'ரெட்மீ நோட் 7S': விலை!
முன்னதாக கூறியதுபோல, இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் ரெட்மீ நோட் 7 வெர்சனான இருக்கலாம். இந்தியாவில், இந்த ஸ்மார்ட்போனின் விலை ரெட்மீ நோட் 7 மற்றும் ரெட்மீ நோட் 7 Pro ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களின் இடையில் இருக்கலாம். இந்தியாவில் ரெட்மீ நோட் 7-னின் விலை 9,999 ரூபாயிலிருந்தும், ரெட்மீ நோட் 7 Pro-வின் விலை 13,999 ரூபாயிலிருந்தும் துவங்குகிறது. சீனாவில், இந்த ரெட்மீ நோட் 7 3GB RAM + 32GB சேமிப்பு அளவு 999 யுவான்கள் (10,300 ரூபாய்) எனவும், 4GB RAM + 64GB சேமிப்பு அளவு 1,199 யுவான்கள் (12,400 ரூபாய்) எனவும் மற்றும் 6GB RAM + 64GB சேமிப்பு அளவு 1,399 யுவான்கள் (14,500 ரூபாய்) எனவும் மூன்று வகைகளில் வெளியாகியுள்ளது.
'ரெட்மீ நோட் 7S': சிறப்பம்சங்கள்!
முன்னதாக, ஃப்ளிப்கார்ட் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனின் விற்பனைக்காக அறிமுகப்படுத்திய ஒரு பக்கத்தில், இந்த நோட் 7S-ன் கேமராவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை, வரிசையாக அடுக்கி நீங்கள் எதிர்பார்த்த வண்ணத்திலேயே, சிறந்த கேமராவை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளியாகவுள்ளது என குறிப்பிட்டிருந்தது. அந்த பக்கத்தில், இந்த ஸ்மார்ட்போன், சிறந்த பேட்டரி, மிகச்சிறந்த செயல்பாடு, அழகான அமைப்பு வடிவமைப்பு மற்றும் நம்பிக்கையான தரத்தில் வெளியாகவுள்ளது என குறிப்பிட்டிருந்தது.
சியோமி இந்தியாவின் நிர்வாக இயக்குனர் மனு குமார் ஜெய்ன், இந்த ரெட்மீ நோட் 7S, 48 மெகாபிக்சல் கேமரா கொண்டிருக்கும் என அறிவித்திருந்தார். இதில் இரண்டு பின்புற கேமராக்கள் இருக்கும் எனவும் குறிப்பிட்டிருந்தார். இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் ரெட்மீ நோட் 7 வெர்சனான இருக்கலாம் என கூறப்படுவதால், இந்த ஸ்மார்ட்போனில், 48 மெகாபிக்சல் மற்றும் 5 மெகாபிக்சல் என இரண்டு பின்புற கேமராக்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சியோமி நிறுவனம் வெளியிட்டிருந்த ஒரு புகைப்படத்தில், இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் வாட்டர் ட்ராப்(Water Drop) நாட்ச் கொண்டிருக்கும் என்பதை குறிப்பிட்டிருந்தது. இந்த ஸ்மார்ட்போன் சிவப்பு நிற வண்ணத்தில் வெளியாகும் என்ற தகவலும் உறுதியாகவுள்ளது.
ரெட்மீ நோட் தொடரில், ரெட்மீ நோட் 7S புதியதாக அறிமுகமாகவுள்ளது. ரெட்மீ நோட் 7 Pro மற்றும் ரெட்மீ நோட் 7 என இரண்டு மாடல்கள் சமீத்தில் வெளியாகி, இன்னும் சந்தையில் வெற்றிகரமாக விற்பனையாகிக்கொண்டிடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ரெட்மீ நோட் 7S ஸ்மார்ட்போன், இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுக்கும் பொதுவானதாக ஒரு அமைப்பு கொண்டு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் ரெட்மீ நோட் 7 வெர்சனான இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போன், 6.3-இன்ச் FHD+ திரை, 19.5:9 என்ற திரை விகிதம் கொண்டிருக்கலாம். 2.2GHz குவல்காம் ஸ்னேப்ட்ராகன் 660 ப்ராசஸர் கொண்டு வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 450 நிட்ஸ் ஒளியளவு, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 கொண்டிருக்கும். இதில் 4000mAh அளவிலான பெரிய பேட்டரி வசதி கொண்டிருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 13 மெகாபிக்சல் அளவிலான முன்புற கேமரா இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
4G வசதி, வை-பை, ப்ளூடூத் v5, வை-பை மற்றும் 3.5mm ஹெட்போன் ஜாக், டைப்-C சார்ஜர் போர்ட் ஆகியவற்றை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். 159.21x75.21x8.1mm என்ற அளவினை கொண்ட இந்த ஸ்மார்ட்போன், 186 கிராம் எடை கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்