ரெட்மி நோட் 7 தயாரிப்பின் 3ஜிபி ரேம் + 32ஜிபி சேமிப்பு வசதி கொண்ட மாடல் ரூ.9,999க்கு துவங்குகிறது.
சியோமியின் இந்த தயாரிப்புகள் ஓன்க்ஸ் ப்ளாக், ரூபி ரெட் மற்றும் சஃபையர் ப்ளூ நிறங்களில் வருகின்றன.
இந்தியாவில் இன்று முதல் ஓப்பன் சேல் மூலம் ரெட்மி நோட் 7 ஸ்மார்ட் போன் விற்பனை செய்யப்படவிருக்கிறது. இன்று மதியம் 12 மணி முதல் ஃப்ளிப்கார்ட், மற்றும் எம்ஐ.காம் தளங்களில் 24x7 என்ற ரீதியில் இந்த போன் கிடைக்கும். இதற்கு முன்னர் நோட் 7, ஃப்ளாஷ் மூலம் வாரம் ஒரு முறை விற்பனை செய்யப்பட்டு வந்தது. கடந்த பிப்ரவரி மாதம் ரெட்மி நோட் 7 இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. பல அட்டகாச சிறப்பம்சங்களைப் பெற்ற இந்த போன், இந்திய சந்தையில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
ரெட்மி நோட் 7 விலை:
ரெட்மி நோட் 7 தயாரிப்பின் 3ஜிபி ரேம் + 32ஜிபி சேமிப்பு வசதி கொண்ட மாடல் ரூ.9,999க்கு துவங்குகிறது. அடுத்தபடியாக இருக்கும் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மாடல் ஸ்மார்ட்போன் ரூ.11,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. சியோமியின் இந்த தயாரிப்புகள் ஓன்க்ஸ் ப்ளாக், ரூபி ரெட் மற்றும் சஃபையர் ப்ளூ நிறங்களில் வருகின்றன.
| Redmi Note 7 Model | Redmi Note 7 Price |
| 3GB/ 32GB | Rs. 9,999 |
| 4GB/ 64GB | Rs. 11,999 |
ரெட்மி நோட் 7 விமர்சனம்
ரெட்மி நோட் 7 அமைப்புகள்:
6.3 இஞ்ச் ஃபுல் ஹெச்டி திரை, வாட்டர் ட்ராப் வகை நாட்ச் என அனைத்து முன்னணி அமைப்புகளையும் ரெட்மி நோட் 7 பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குவால்கம் ஸ்னாப்டிராகன் 660 ஆக்டா-கோர் பிராசஸர் கொண்டுள்ளது.
இதர வசதிகளாக (3ஜிபி/ 4ஜிபி) ரேம் வகைகள் மற்றும் 32ஜிபி / 64ஜிபி சேமிப்பு வசதிகளை இந்த ஸ்மார்ட்போன் பெற்றுள்ளது. இந்த போனில் இரண்டு பின்புற கேமரா சென்சார்களை இருக்கும் நிலையில், அதில் ஓன்று 12 மெகா பிக்சலை கொண்ட முதற்நிலை சென்சாரையும், 5 மெகா பிக்சல் இரண்டாம் நிலை டெப்த் சென்சாரையும் பெற்றுள்ளன. 48 மெகா பிக்சல் திறன் கொண்ட பின்புற கேமராவும் இந்த போனில் இடம் பெற்றுள்ளது.
கூடுதலாக 4,000mAh பேட்டரி, பின்புற ஃபிங்கர் பிரின்ட் சென்சார், டைப் சி போர்ட் மற்றும் குயிக் சார்ஜ் சப்போர்ட் போன்றவற்றை இந்த போன் பெற்றுள்ளன. இந்த போனின் மென்பொருளைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 9 பைய் மற்றும் எம்ஐயுஐ 10-ல் இயங்குகிறது. மேலும் இந்த ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் ஓன்க்ஸ் பிளாக், ரூபி ரெட் மற்றும் சபையர் புளூ நிறங்களில் விற்பனை செய்யப்படுகின்றன.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Ponies OTT Release Date: Know When to Watch This Emilia Clarke and Haley Lu Richardson starrer web series online