சியோமி நிறுவனம் தனது ஸ்மார்ட்போனான ரெட்மீ நோட் 7 Pro- வை மே 8-ஆன இன்று 12 மணிக்கு விற்பனைக்கு விட உள்ளது. வழக்கம்போல இந்த ஸ்மார்ட்போன், ஃப்ளிப்கார்ட் மற்றும் சியோமி சொந்த தளங்களில் விற்பனைக்கு இருக்கும்.
ஒருவேளை, நீங்கள் இந்த மொபைல்போனை பெற நினைத்தால் இந்த தளங்களில் நுழைந்து, இந்த மொபைல்போனை பெற்றுக்கொள்ளலாம். 12 மணிக்கு இந்த விற்பனை துவங்க உள்ள நிலையில், அந்நிறுவனம் மிக குறைந்த எண்ணிக்கையிலேயே இந்த ஸ்மார்ட்போனை விற்பனைக்கு வைக்கும் என்பதால், இந்த ஸ்மார்ட்போனை பெற விரும்புவோர் அந்த தளங்களுக்கு விரைவில் செல்வது அவசியம்.
ரெட்மீ நோட் 7 Pro-வின் விலை
இந்தியாவில் இந்த ரெட்மீ நோட் 7 Pro ரூபாய் 13,999 என்ற விலையிலிருந்தே துவங்குகிறது. ஆன்லைன் தளங்களில் 4GB RAM + 64GB சேமிப்பு அளவு கொண்ட இந்த ரெட்மீ நோட் 7 Pro-வின் விற்பனை விலை ரூபாய் 13,999. அதே சமயம் 6GB RAM + 128GB சேமிப்பு அளவைக் கொண்ட ரெட்மீ நோட் 7 Pro-வை சேர்ந்த மற்றொரு வகை போனின் விலை ரூபாய் 16,999.
மேலும் இந்த ஸ்மார்ட்போன், இந்திய சந்தைகளில் நெப்ட்யூன் ப்ளூ (Neptune Blue), நெபுலார் ரெட் (Nebular Red), மற்றும் ஸ்பேஸ் ப்ளாக் (Space Black) ஆகிய வண்ணங்களில் கிடைக்கும்.
ஜியோ நிறுவனம் ரெட்மீ நோட் 7 Pro வாடிக்கையாளர்களின் 198 ரூபாய்க்கு மேல் செய்யும் அனைத்து ரீசார்ஜ்களுக்கு இரட்டிப்பு டேட்டா சலுகையை அறிவித்துள்ளது.
ரெட்மீ நோட் 7 Pro-வின் அம்சங்கள்
இரண்டு நானோ சிம் வசதி கொண்ட இந்த ரெட்மீ நோட் 7 Pro அண்ட்ராய்ட் 9.0 பை (Android 9.0 Pie) அமைப்பு கொண்டு வெளியாக உள்ளது. 6.3இன்ச் FHD+ திரை, 19.5:9 திரை விகிதம் மற்றும் நாட்ச் திரை பொன்ற திரை அம்சங்களை கொண்டுள்ளது இந்த ரெட்மீ நோட் 7 Pro.
4GB RAM + 64GB சேமிப்பு அளவு மற்றும் 6GB RAM + 128GB சேமிப்பு அளவு என இரண்டு வகைகள் கொண்டு வெளியாக உள்ள இந்த ஸ்மார்ட்போனில் 256GB அளவு வரை சேமிப்பு அளவை கூட்டிக்கொள்ளலாம். ஸ்னேப்ட்ராகன் 675 ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்பு கொண்டு செயல்படும் இந்த ஸ்மார்ட்போனில் பின்புறம் 48MP + 5MP என இரண்டு கேமராக்களும் முன்புறம் 13MP செல்பி கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.
4000mAh பேட்டரி அளவு கொண்ட இந்த போன், குவால்காமின் அதிவேக 4.0 சார்ஜ் வசதி கொண்டு வெளியிடப்படுகிறது. 4G வசதி, வை-பை, ப்ளுடூத் v5.0, USB டைப்-C சார்ஜர் போர்ட் மற்றும் 3.5mm ஹெட்போன் ஜாக் போன்ற அம்சங்களை கொண்டு வெளிவற உள்ளது.
Do Redmi Note 7 Pro, Redmi Note 7, and Mi Soundbar redefine their price segments? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்