சீன நிறுவனமான சியோமியின் மிகவும் முக்கிய தயாரிப்புக்களில் ஒன்றான ரெட்மி நோட் 7 இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. அதன்படி வரும் பிப்ரவரி 28ஆம் தேதி இந்திய சந்தைகளில் ரெட்மி நோட் 7 அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கெனவே இந்த போன் குறித்து தொடர்ந்து வதந்திகள் மற்றும் தகவல்கள் வந்த நிலையில், இந்த போன் கடந்த ஜனவரி மாதம் சீனாவில் அறிமுகமாகி சுமார் 1 மில்லியன் ரெட்மி போன்களை விற்று சாதனை படைத்தது.
மேலும், சீனாவில் வெளியாகிய பிறகு இந்தியாவில் தான் இந்த போன் முதலில் வெளியாகுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போன் இந்தியாவில் ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு கிடைக்கும் வரவேற்பை முழுவதுமாக மாற்றி ஒரு தனி இடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
3ஜிபி ரேம்/32 ஜிபி சேமிப்பு வசதி கொண்டுள்ள மாடல் ரூபாய் 10,300க்கும், ரூபாய் 12,400க்கும் 4ஜிபி ரேம்/64 ஜிபி சேமிப்பு வசதி கொண்ட மாடலும் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்கப்படுகிறிது.
அதுபோல் 6ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு வசதி கொண்டுள்ள மாடல் ரூபாய் 14,500 விற்பனை செய்யப்படும் என எதிர்பார்கப்படுகிறது.
6.3 இஞ்ச் திரை, ஸ்னாப்டிராகன் 660 ஆக்டா கோர் பிராஸ்சர் மற்றும் 48 மெகா பிக்சல் கேமரா போன்ற பல முக்கிய வசதிகளுடன் இந்த ரெட்மி நோட் 7 வெளியாகும் என எதிர்பார்கப்படுகிறது.
டுவைலைய்ட் கோல்டு, பேன்டசி புளூ மற்றும் பிரைய்ட் பிளாக் போன்ற நிறங்களில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்