Photo Credit: Twitter/ Manu Kumar Jain
ரெட்மீ 'K20, K20 Pro' ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகமாகும் தேதி நாளை அறிவிக்கப்படலாம். சியோமி இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரியான மனு குமார் ஜெய்ன் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், இந்தியாவில் ரெட்மீ 'K20, K20 Pro' ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் குறித்த ஒரு முக்கியமான அறிவிப்பை ஜூன் 26 அன்று அறிவிக்கப்போவதாக கூறியுள்ளார்.
அறிமுக தேதிதான் அறிவிக்கப்படப் போகிறது என்பது குறித்து எந்த ஒரு உறுதியான தகவலையும் அவர் கூறவில்லை. இருப்பினும் முன்னதாகவே, சீனாவில் அறிமுகமான இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் அனைவருக்கும் தெரிந்ததுதான். ரெட்மீ K20 ஸ்மார்ட்போன்கள் குறித்து சியோமி இந்தியா நிறுவனம் அறிவிக்க வேண்டிய இரண்டு தகவல்கள் இந்தியாவின் இந்த ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் எப்போது இந்த ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு வரப்போகிறது. எனவே, இந்த இரண்டு தகவல்களை மனு ஜெய்ன் இன்று அறிவிப்பார் என எதிர்பார்க்கலாம்.
இரண்டு நானோ சிம் வசதி கொண்ட இந்த ரெட்மீ K20 Pro ஸ்மார்ட்போன் அண்ட்ராய்ட் 9 பை அமைப்பு கொண்டுள்ளது. 6.39 இன்ச் FHD+ திரை(1080x2340 பிக்சல்கள்), 19.5:9 திரை விகிதம், 91.9 சதவிகித திரை-உடல் விகிதம் என அட்டகாசமான திரை அம்சங்களை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்லே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னேப்ட்ராகன் 855 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.
48 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமரா கொண்டுள்ள இந்த ரெட்மீ K20 Pro மொத்தம் 3 பின்புற கேமராக்களை கொண்டுள்ளது, மற்ற இரு கேமராக்கள் 13 மெகா பிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் அளவிலான மற்றொரு கேமரா. இதன் முன்புற கேமரா, 20 மெகாபிக்சல் அளவிலான பாப்-அப் கேமரா என்பது குறிப்பிடத்தக்கது.
2 நாட்கள் பேட்டரி பேக்-அப் என்ற உறுதியை அளித்துள்ள சியோமி நிறுவனம், இந்த ஸ்மார்ட்பொனில் 4000mAh பேட்டரியை பொருத்தியுள்ளது எனவும் கூறப்படுகிறது. மேலும், 27W அதிவேக சார்ஜருடன் வெளியாகியுள்ளது. மேலும் மற்ற ஸ்மார்ட்போன்கள் போன்றே 4G வசதி மற்றும் ப்ளூடூத் v5, வை-பை வசதிகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
அனைத்து அம்சங்களிலும் ரெட்மீ K20 Pro-வை போன்றே அமைந்துள்ள ரெட்மீ K20, ப்ராசஸர் செயல்பாட்டில் மட்டும் சற்று வேறுபட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னேப்ட்ராகன் 730 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போனிற்கு 27W சார்ஜருக்கு பதில் 18W சார்ஜர் வழங்கப்படவுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்