Photo Credit: Weibo/ Redmi
நாளை அறிமுகமாகவுள்ள ரெட்மீ K20
சியோமி, தனது துணை நிறுவனமான ரெட்மீயின் கீழ் வெளியிடவுள்ள அடுத்த ஸ்மார்ட்போனான 'K20' பற்றி சமீப காலமாக விளம்பரங்களை மேற்கொண்ட வண்ணம் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மே 28-ஆன நாளை அறிமுகமாகும் என சியோமி நிறுவனம் கூறியுள்ளது. இன்னிலையில், இந்த நிகழ்வில், ரெட்மீ K20 மற்றும் ரெட்மீ K20 Pro என இரண்டு ஸ்மார்ட்போன்களை சியோமி நிறுவனம் அறிமுகப்படுத்தலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் வெளியாகும் பட்சத்தில், தற்போது வெளியான ஒன்ப்ளஸ் 7 Pro -விற்கு போட்டியாக இந்த ஸ்மார்ட்போன்கள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. நாளை சீனாவில் வெளியாக இருக்கும் இந்த K20 இந்தியாவில் விரைவில் வெளியாகும் என, சியோமி இந்தியாவின் நிர்வாக இயக்குனர் மனு குமார் ஜெய்ன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார். இந்த ஸ்மார்ட்போன் குறித்து பல தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் நாளை சீனாவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. கேமிங்கிற்கு சிறந்த ஸ்மார்ட்போனாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் கேமிங் டர்போ 2.0 கொண்டு வெளியாகவுள்ளது. மேலும் லூ வெய்பிங், 'இந்த ஸ்மார்ட்போன் சத்தம் நிறைந்தது, கேம் விளையாடும்பொழுது சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தும்' என கூறியுள்ளார்.
இந்த ஸ்மார்ட்போனின் முன்பதிவு கடந்த மே 24-ஆம் தேதியே துவங்கிவிட்டது. சீனாவில் 100 யுவான்கள்( 1,000 ரூபாய்) அளித்து இந்த ஸ்மார்ட்போனை முன்பதிவு செய்துகொள்ளலாம்.
மூன்று வகைகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் இந்த ஸ்மார்ட்போன், 6GB RAM + 64GB சேமிப்பு அளவில் வெளியாகும் வகையின் விலை, 2,599 யுவான்கள் (26,100 ரூபாய்) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 6GB RAM + 128GB சேமிப்பு அளவு மற்றும் 8GB RAM + 128GB சேமிப்பு அளவு மேலும் இரண்டு வகைகளில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த ஸ்மார்ட்போன்களின் விலை, 2,799 யுவான்கள் (28,100 ரூபாய்) மற்றும் 2,999 யுவான்கள் (30,200 ரூபாய்) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்த ஸ்மார்ட்போனின் புகைப்படங்களை மை ஸ்மார்ட் ப்ரைஸ் (MySmartPrice) தளம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம், ஒரு சிவப்பு நிற நெருப்பு பொன்ற அமைப்பிலான தோற்றத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே மாதிரி அமைப்பில், நீல நிறம் கொண்ட ரெட்மீ K20-யின் புகைப்படமும் தற்போது வெளியாகியுள்ளது
48 மெகாபிக்சல் கொண்டு வெளியாகவுள்ள ரெட்மீ K20 Pro ஸ்னேப்ட்ராகன் 855 எஸ் ஓ சி ப்ராசஸர் மற்றும் 4000mAh பேட்டரி கொண்டு வெளியாகும் என சியோமி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. ஸ்னேப்ட்ராகன் 855 எஸ் ஓ சி ப்ராசஸர் கொண்டுள்ளதாக கூறப்படும் ரெட்மீ K20 Pro-வை போல் இல்லாமல், ரெட்மீ K20-யில் ஸ்னேப்ட்ராகன் 730 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த இரு ஸ்மார்ட்போன்களும், 6.39 இன்ச் FHD+ திரையை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 48 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமரா பொருத்தப்படிருக்கும் என அறிவித்திருந்த சியோமி நிறுவனம், வைட்-ஆங்கிள் கேமராவும் பொருத்தப்படிருக்கும் என அறிவித்திருந்தது. ஒருவேளை இந்த ஸ்மார்ட்போன், மூன்று பின்புற கேமராக்களை கொண்டு வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ரெட்மீ K20 Pro-வின் முன்புற கேமரா, பாப்-அப் கேமராவாக இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
2 நாட்கள் பேட்டரி பேக்-அப் என்ற உறுதியை அளித்துள்ள சியோமி நிறுவனம், இந்த ஸ்மார்ட்பொனில் 4000mAh பேட்டரியை பொருத்தியுள்ளது எனவும் கூறப்படுகிறது.
சீனாவில் நாளை இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகவுள்ள நிலையில், இன்னும் இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் எப்போது வெளியாகும் என்ற நிலையான தகவலை சியோமி நிறுவனம் வெளியிடவில்லை.
Which is the best phone under Rs. 8,000 in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்