இந்திய ரெட்மீ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மனு குமார் ஜெய்ன் "கில்லர் 2.0 விரைவில் வருகிறது" என ஒரு ட்வீட்டில் கூறியுள்ளார்.
ரெட்மீ நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்போன், K20!
சியோமி நிறுவனம் தனது துணை நிறுவனமான ரெட்மீ நிறுவனத்தின் பெயரில் தனது அடுத்த ஸ்மார்ட்போனை வெளியிடப் போவதாகவும், சியோமி நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ள அந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்து நாளுக்கு நாள் ஏதாவது ஒரு புதிய தகவல் வெளியாகிய வண்ணமே இருந்தது. ஆனால், சமீபத்தில் சீனாவில் ரெட்மீ நிறுவனம், ரெட்மீ K20 ஸ்மார்ட்போனை வெளியிடப்போவதாக உறுதியான தகவலை வெளியிட்டிருந்தது. இதை அடுத்து இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவிலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை உறுதி செய்யும் வகையில், இந்திய ரெட்மீ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மனு குமார் ஜெய்ன் "கில்லர் 2.0 விரைவில் வருகிறது" என ஒரு ட்வீட்டில் கூறியுள்ளார்.
ஓன்ப்ளஸ் நிறுவனம் வெளியிட்டிருந்த புதிய போன்களுக்கு வாழ்த்து சொல்வதற்காக பதிவு செய்யப்பட்ட ட்வீட்டில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளர் ஜெய்ன். அந்த ட்வீட்டில் அவர் கூறியிருப்பது,"சந்தையிலுள்ள புதிய ஸ்மார்ட்போன்களுக்காக ஒன்ப்ளஸ் நிறுவனத்திற்கு வாழ்த்துக்கள். கில்லர் 2.0: விரைவில் வருகிறது" என குறிப்பிட்டிருந்தார்.
முன்னதாக, ரெட்மீயின் அடுத்த ஸ்மார்ட்போன் குறித்து பல தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன. அந்த வகையில், சமீபத்தில் வெளியான தகவல்களின்படி, இந்த ஸ்மார்ட்போன்களை சீனாவில் முதலில் அறிமுகப்படுத்தவுள்ளதாக வெளியான தகவலை அடுத்து, இந்த ஸ்மார்ட்போனிற்கான அறிவிப்பை மே 13 அன்று அந்த நிறுவனம் வெளியிட்டது. இதனை உறுதி செய்யும் வகையில், அந்த நிறுவனத்தின் பொது மேலாளர் லூ வெய்பிங், புதிய ஸ்மார்ட்போனுக்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். ரெட்மீ K20 என்ற பெயரை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். ரெட்மீ K20-ல் 'K' என்பது "கில்லர்" என்பதை குறிக்கிறது என கூறியிருக்கிறார் வெய்பிங்.
வெய்பிங், தனது வெய்போ சமுக வலைதளப் பக்கத்தில் ஒரு வாக்கெடுப்பை நடத்தியிருந்தார். அந்த வாக்கெடுப்பில், ரெட்மீ நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட்போன் என்னவாக இருக்கும் என்ற கேள்வியை எழுப்பி, இவற்றில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுங்கள் என K20, P20, T20, மற்றும் X20 என நான்கு பதில்களையும் அளித்திருந்தார். அதனை அடுத்து ரெட்மீ நிறுவனம் மற்றும் லூ வெய்பிங் ஆகியோர் தமது வெய்போ சமுக வலைதள பக்கத்தில், இந்த ஸ்மார்ட்போனிற்கான அதிகாரப்பூர்வமான பெயரை அறிவித்துள்ளனர்.
இந்த ஸ்மார்ட்போன் ஸ்னேப்ட்ராகன் 855 எஸ் ஓ சி ப்ராசஸர் கொண்டு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 48 மெகாபிக்சல், 8 மெகாபிக்சல் மற்றும் 13 மெகாபிக்சல் என மூன்று பின்புற கேமராகளும், 32 மெகாபிக்சல் முன்புற கேமராவும் பொருத்தப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy S26 Ultra Wallpaper Leak Hints at Possible Colour Options