ரெட்மி 8ல் சோனி IMX363 sensor கொண்ட 12 மெகா பிக்செல் கேமரா உள்ளது.
சியோமியின் ஆரம்ப நிலை போனான ரெட்மி 8 மீண்டும் இன்று முதல் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. இது ஃப்ளிப்கார்ட், Mi.com மற்றும் நாடு முழுவதும் உள்ள Mi நேரடி விற்பனை நிலையங்களிலும் கிடைக்கும்.
Snapdragon 439 SoC திறன் கொண்ட இந்த ரெட்மி 8 போனில் பின்பக்கம் டூயல் கேமாரக்கள் உள்ளன. 5,000mAh பேட்டரி திறன் கொண்ட இந்த போனில் 18W பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. பின்பக்கம் சோனி IMX363 sensor கொண்ட 12 மெகா பிக்செல் கேமரா உள்ளது. மேலும், விலை மற்றும் தள்ளுபடி விவரங்களை அறிந்துகொள்ளவும்.
ரெட்மி 8, 3ஜிபி ரேம் + 32ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் விலையானது, ரூ.7,999 ஆகும், இதே 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் விலையானது, ரூ.8.999ஆகும். இதில், ரெட்மி 8s 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் போனானது சியோமி இந்திய வலைதளம் மற்றம் ஃப்ளிப்கார்ட்டில் ரூ.7,9999க்கு கிடைக்கிறது. இன்னும், 5 மில்லியன் யூனிட் போன்களை அந்நிறுவனம் விற்பனை செய்ய வேண்டியுள்ளது.
இந்த ரெட்மி 8 போனானது, பிளாக், ரெட் மற்றும் சப்பையர் ப்ளூ உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இந்த போனை எச்டிஃஎப்சி டெபிட் கார்டு மூலம் வாங்குபவர்களுக்கு 10 சதவீத உடனடி தள்ளுபடி கிடைக்கிறது. இதேபோல், வட்டியில்லா தவனையிலும் ஆக்சிஸ் வங்கி டெபிட் கார்டு பயன்படுத்தி வாங்கிக்கொள்ளலாம். இன்று பிற்பகல் 12 மணி முதல் இந்த போன் விற்பனைக்கு வந்துள்ளது.
இதில் dual-SIM (Nano), Android 9 Pie உடன் MIUI 10 இடம்பெற்றுள்ளது. 6.22-இன்ச் எச்டி + டிஸ்பிளேயுடன் Corning Gorilla Glass 5 பாதுகாப்பு அம்சமாக கிடைக்கிறது. octa-core Snapdragon 439 SoC, உடன் 4GB RAM வரை கொண்டுள்ளது. இந்த ரெட்மி 8 போனில் 12-மெகா பிக்செல் primary கேமராவுடன் f/1.8 aperture, 2-megapixel டெப்த் கேமராவும் கொண்டுள்ளது. முன்பக்கம் 8 மெகா பிக்செல் செல்பி கேமராவும் கொண்டுள்ளது.
இந்த போனில் 64ஜிபி நினைவகம் கொண்டிருந்தாலும், மைக்ரோ SD கார்டு துணையுடன் (512ஜிபி) வரை நினைவகத்தை விரிவுப்படுத்திக் கொள்ளலாம். 4G VoLTE, வை-பை, ஜிபிஎஸ்/ A-GPS, infrared, வயர்லெஸ் FM ரேடியோ, 3.5mm ஹெட்போன் jack, USB Type-C port சார்ஜிங் உள்ளிட்ட வசதிகளையும் கொண்டுள்ளன. ரெட்மி 8 போனானது, 5,000 mAh பேட்டரி திறன் உடன் 18W பாஸ்ட் சார்ஜிங் அம்சமும் உள்ளது. போனின் பின்பக்கம் fingerprint sensor-ம் கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்