இன்று நள்ளிரவு முதல் ரெட்மீ 6A ஸ்மார்ட்போன் இந்தியாவில் விற்பனைக்கு வெளியாகவுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் ரெட்மீ 6A தற்போது 5,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
மேலும் இந்த புதிய அறிமுகத்தை பொருத்தவரை16 மற்றும் 32 ஜிபி சேமித்து வகைக்கும் திறனைக்கொண்டது. போனின் பின்புறம் 13 மெகாபிக்சல் கேமரா உள்ள நிலையில் அதற்கு ஏற்ற வகையில் 3,000mAh பேட்டரி பவரும் வழங்கப்பட்டுள்ளது.
சுமார் 5.45 இஞ்ச் உயரம் உள்ள இந்த ரெட்மீ 6A ஸ்மார்ட்போன் 2 ஜபி ரேம் கொண்டு இயங்குகிறது. 4G VoLTE, புளூடூத் போன்ற அனைத்து நவீன தொழிநுட்பங்களுடன் சுமார் 145 கிராம் எடையுள்ள இந்த ஸ்மார்ட்போன் இன்று வெளிவரவுள்ளது.
இந்திய ரூபாயின் தொடர் வீழ்ச்சியால் ரெட்போன்களின் விலை உயர்ந்து காணப்பட்ட நிலையில் தற்போது விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. சியோமி நிறுவனம் சார்பாக வெளியிடப்பட்ட ட்விட்டில், ரெட்மீ 6A அமேசான் மற்றும் எம்ஐ.காம் -யில் கிடைக்கும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த போன் பிளாக், புளூ,ரோஸ் கோல்டு மற்றும் புளூ ஹூஸ் போன்ற நிறங்களில் கிடைக்கும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்