சுமார் 10 சியோமி மற்றும் எம்ஐ போன்களுக்கு இந்த அப்டேட் கிடைக்குவுள்ளதாக சியோமி நிறுவனம் சார்பில் தகவல் வெளியாகியுள்ளது.
சுமார் 10 சியோமி மற்றும் எம்ஐ போன்களுக்கு இந்த அப்டேட் கிடைக்குவுள்ளதாக சியோமி நிறுவனம் சார்பில் தகவல் வெளியாகியுள்ளது.
ஆண்டிராய்டு Q-வின் தயாரிப்பில் கூகுள் நிறுவனம் தனது கவனத்தை செலுத்தி வரும் நிலையில், சியோமி நிறுவனம் தனது போன்களுக்கு ஆண்டிராய்டு 9 பைய் அப்டேட்களை கொடுக்க முடிவெடுத்துள்ளது.
அதன்படி சுமார் 10 சியோமி மற்றும் எம்.ஐ போன்களுக்கு இந்த அப்டேட் கிடைக்கவுள்ளதாக சியோமி நிறுவனம் சார்பில் தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரை வெளியான தயாரிப்புகளான எம்ஐ மிக்ஸ் 2, எம்ஐ 6 ரெட்மி 6A ரெட்மி 6 மற்றும் எம்ஐ நோட் 3 போன்களுக்கு இந்தாண்டு இறுதிக்குள் இந்த அப்டேட் கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. இதுகுறித்து MIUI தளத்தில் வெளியான தகவலின் படி சியோமியின் சில முக்கிய தயாரிப்புகளான ரெட்மி நோட் 5 மற்றும் ரெட்மி Y2 மற்றும் ரெட்மி S2 ஆகிய போன்களுக்கு இந்த ஆண்டின் முதல் பாதிக்குள் (மார்ச் இறுதிக்குள்) ஆண்டிராய்டு அப்டேட் கிடைக்கவுள்ளது.
மேலும் அந்த பதிவில் எம்ஐ 9 Transparent Edition, எம்ஐ 6X மற்றும் ரெட்மி நோட் 6 ப்ரோ ஆகிய போன்களும் ஆண்டிராய்டு அப்டேட்டை பெறுகின்றன.
இந்த அப்டேட்கள் MIUI சீனா ரோமில் இயங்கும் போன்கள் மற்றும் MIUI குளோபல் ரோம் போன்களில் மட்டுமே வெளியாகிறது.
கடந்த ஜனவரி மாதம் MIUI தரப்பில் வெளியான தகவலின் படி சியோமி நிறுவனம் தனது தயாரிப்புகளான ரெட்மி நோட் 5, ரெட்மி 6 ப்ரோ மற்றும் ரெட்மி Y2 போன்களுக்கு இந்த ஆண்டின் முதல் பாதிக்குள் ஆண்டிராய்டு 9 அப்டேட் பெறும் என தகவல் வெளியானது.
அதன் பின்னர் கடந்த மாதம் இந்த போன்களில் சோதனை கட்டத்தில் இருந்த ஆண்டிராய்டு 9 பைய் தற்போது வரும் மார்ச் மாதத்திற்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுபோன்ற ஆண்டிராய்டு அப்டேட்டை பொதுவாக சியோமி நிறுவனம் எளிதில் வழங்குவதில்லை, ஆனால் தற்போது ஹெச்எம்டி நிறுவனத்தை போல சியோமி போன்களும் ஆண்டிராய்டு அப்டேட்ஸ் மற்றும் MIUI ஐடரேஷன்சை தர முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Sony Announces Year-End Holiday Sale in India on PS5 Accessories, Games