சியோமி நிறுவனம் தனது ரெட்மீ ஸ்மார்ட்போன் தயாரிப்புகளின் விலைகளை ரூ.2000 வரை தள்ளுபடி செய்துள்ளது.
இந்த விலை தள்ளுபடி இன்று முதல் பிப்ரவரி 8 ஆம் தேதி வரை அமலுக்குள்ளது.
சியோமி நிறுவனம் தனது தயாரிப்புகளான ரெட்மீ ஸ்மார்ட்போன்களுக்கு குறைந்தகால விலை குறைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படும் ரெட்மீ போன்கள் இன்று பிப்ரவரி 6 ஆம் தேதி முதல் பிப்ரவரி 8 ஆம் தேதி வரை விற்பனை செய்யப்படவுள்ளது.
இந்த திடீர் விலை குறைப்பை தொடர்ந்து, ரெட்மீ 6A, ரெட்மீ 6 மற்றும் ரெட்மீ 6 ப்ரோ ஆகிய மூன்று போன்களும் ரூ.500 தள்ளுபடி முதல் ரூ.2000 வரை தள்ளுபடி செய்யப்படுகிறது. இந்த தற்காலிக விலை குறைக்கப்பட்டுள்ள ரெட்மீ 6 போன்களை சியோமி இ-ஸ்டோர், அமைசான் இன் மற்றும் ப்ளிப்கார்ட் ஆகிய இணையதளங்களில் கிடைக்கிறது.
அதன்படி தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படும் ரெட்மீ 6A (5,999), ரெட்மீ 6 (8,179) மற்றும் ரெட்மீ 6 ப்ரோ (9,999) இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த சேலை பற்றிய தகவல் இன்னும் முழுமையாக அறியப்படவில்லை என்ற நிலையில் எக்ஸ்சேஞ்ச் திட்டங்கள், வட்டியில்லா தவணை முறை மற்றும் இதர வங்கி ஆஃப்கர்களுடன் வெளியாகுகிறது.
12,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ரெட்மீ 6 ப்ரோ 4 ஜிபி ரேம் 64 ஜிபி நினைவகம் தற்போது வெளியான தள்ளுபடி விலையில் ரூபாய் 10,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த வகையின் மற்ற ஓரு வெளியீடான 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி நினைவகம் கொண்ட ஸ்மார்ட்போன் 2000 ரூபாய் குறைந்தே விற்பனை செய்யப்படுகிறது.
ரெட்மீ 6 ஏ ப்ரோவின் 2ஜிபி ரேம்/32 ஜிபி நினைவகம் கொண்ட போன் ரூபாய் 6,499 க்கும், ரெட்மீ 6 போனின் 3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி நினைவகம் கொண்ட மொபைல் போன் 8,499 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்பெஷல் தள்ளுபடி இந்த மூன்று நாட்களுக்கு மட்டுமே பொருந்தும்.
மேலும் ப்ளிப்கார்ட் நிறுவனம் நடத்தும் சூப்பர் வீக் சேல் இடம்பெற்றுள்ள இந்த வகை போன்களை ஆக்சிஸ் வங்கியின் பஸ் கிரெடிட் கார்டு வைத்து வாங்குபவர்க்கு10 சதவீதம் அதிகம் தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படுகிறது.
அதுபோல ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு 1,800 ரூபாய் வரை தள்ளுபடியும் 20 ஜிபி கூடுதல் டேட்டாவும் பெற முடியும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
A Misanthrope Teaches a Class for Demi-Humans To Stream Soon on Crunchyroll