கடந்த மாதம் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியை தொடர்ந்து சீன தயாரிப்பான சியோமி ரெட் மீ 6 மற்றும் ரெட் மீ 6 ஏ வகை போன்களின் விலை 8,499 மற்றும் 6,592 ரூபாய்க்கு கிடுகிடுவென விலை உயர்த்தப்பட்டுள்ளது. சியோமி ரெட் மீ போன்களின் விலையில் ரூபாய் 600 கூட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து தற்போது இந்திய பணமதிப்பு சீரானவுடன் அதன் பழைய விலைக்கே ரெட் மீ பேன்கள் திரும்பியுள்ளனர்.
மேலும் சமீபகாலத்தில் போகோ எப்1 போக்கோவின் (Poco F1) விலை 19,999-லிருந்து 1,000 குறைத்து விற்க்கப்பட்டு வருகிறது. மேலும் ரெட் மீ 6 ஏ வகை போன்களின் நினைவகத்தை பொருத்து அதன் விலை 5,999 லிருந்து தொடங்கி அமேசான் மற்றும் எம்.ஐ வலைதளங்களில் விற்க்கப்பட்டு வருகிறது.
டூயல்-சிம் (நானோ) மற்றும் ரெட் மீ ஏ ஓரியோ மற்றும் எம்.யூ மென்பொருளில் செயல்படுகிறது. 5.45 இஞ்சு உயர ஸ்கரீனும் ,2 ஜிபி ரேம்மும் 16 அல்லது 32 ஜிபி நினைவகமும் கொண்ட இந்த ஸ்மார்ட் போனில் மைக்ரோ எஸ்.டி கார்டும் அடங்கும். 3000 mAh பவர் பாட்டரியை கொண்டது. மேலும் 145 கிராம் எடைகொண்ட இந்த போன்கள் பிளாக், கோல்டு, ரேஸ் கோல்டு மற்றும் புளு ஹூஸ் வண்ணங்களில் கிடைக்கிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்