இதுவரை சியோமி நிறுவனத்தில் 48 மெகாபிக்சல் கொண்ட ஒரே ஸ்மார்ட்போன் ரெட்மீ நோட் 7 Pro-தான்
சியோமி நிறுவனம், தன்னுடைய துணை நிறுவனமான ரெட்மீ அறிமுகப்படுத்திய ரெட்மீ நோட் 7 மற்றும் நோட் 7 Pro ஆகிய மொபைல் போன்களின் விற்பனை எண்ணிக்கை 20 லட்சத்தை எட்டியது. அதனைத் தொடர்ந்து, இந்த விற்பனையை கொண்டாடும் வகையில், தனது அடுத்த போனிற்கான டீசரை வெளியிட்டுள்ளது சியோமி நிறுவனம். இது குறித்து ரெட்மீ நிறுவனம், தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்த டீசரில், இந்த 48 மெகாபிக்சல்களுடைய தனது அடுத்த ஸ்மார்ட்போனுக்கான அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. சியோமி நிறுவனம் தனது அடுத்த ஸ்மார்ட்போனை 48 மேகாபிக்சல் கேமரா கொண்டு வெளியிடவுள்ளது என தகவல்கள் வந்தாலும், அதனை எந்த நிறுவனத்தின் கீழ் வெளியிடப் போகிறது என்கிற தகவல் தெரியாமல் இருந்தது. ரெட்மீ நிறுவனத்தின் ட்விட்டர் அறிவிப்பால் அதுவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த ஆண்டின் பிப்ரவரி மாத இறுதியில் இந்த நிறுவனம் 48 மெகாபிக்சல் கேமரா கொண்ட ரெட்மீ நோட் 7 Pro-வை அறிமுகப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. மூன்று பின்புற கேமராக்கள் கொண்ட போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக டீசர் வெளியிட்டிருந்த சில நாட்களிலேயே இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது என்பதும் கவணிக்கப்பட வேண்டிய விஷயம். மேலும் இந்தியாவில் ஸ்னேப்ட்ராகன் 730 அல்லது ஸ்னேப்ட்ராகன் 730G ப்ராசஸர் கொண்ட ஸ்மார்ட்போனை வெளியிடுவதற்காக இந்த நிறுவனம் திட்டமிட்டுக் கொண்டிருந்தது. ஒருவேளை, அந்த ஸ்மார்ட்போன் இதுவாக கூட இருக்கலாம்.
ரெட்மீ நிறுவனம், தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் செவ்வாய்க்கிழமையான இன்று பதிவிட்டிருந்த பதிவில், இந்த புதிய 48 மெகாபிக்சல் கேமரா கொண்ட ஸ்மார்ட்போனின் வருகையை உறுதி செய்தது. அந்த ட்விட்டர் பதிவில், ரெட்மீ நிறுவனம், "வருகிறது 48 மெகாபிக்சல் சூப்பர் கேமரா கொண்ட புதிய ரெட்மீ ஸ்மார்ட்போன்" என்று பதிவிட்டிருந்தது. இந்த பதிவின் மூலம், அந்த நிறுவனத்தின் 48 மெகாபிக்சல் கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் ரெட்மீ நோட் 7 Pro-வாக மட்டும் இருக்காது என்பது உறுதியானது.
முன்னதாகவே திங்கட்கிழமையான நேற்று, சியோமி இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மனு குமார் ஜெயின், ரெட்மீ நோட் 7 மற்றும் நோட் 7 Pro ஆகிய மொபைல்போன்களின் விற்பனை எண்ணிக்கை 20 லட்சத்தை எட்டியதை கொண்டாடும் வகையில் இந்த 48 மெகாபிக்சல் கேமரா கொண்ட ஸ்மார்ட்போனிற்கான அறிவிப்பை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் சமீபத்திய வதந்திகளை இன்னும் கவனித்து பார்க்கையில், இந்த புதிய 48 மெகாபிக்சல் கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் எம் ஐ-யின் A தொடரில் அடுத்த போனாக இருக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த ஸ்மார்ட்போன் எம் ஐ A2-விற்கு அடுத்த போனான எம் ஐ A3-ஆக இருக்கலாம் என்றும் கூறப்பட்டிருந்தது. ஆனால், இன்று ரெட்மீ நிறுவனம், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் இந்த பதிவு, இந்த ஸ்மார்ட்போன் ரெட்மீ நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட்போனாகவே இருக்கும் என்பது உறுதி செய்யும் வண்ணம் அமைந்துள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்