ரியல்மி எக்ஸ் 3 சூப்பர்ஜூம் எப்போ ரிலீஸ்? முக்கிய அம்சங்கள் வெளியாகின!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 5 மே 2020 11:17 IST
ஹைலைட்ஸ்
  • ரியல்மி எக்ஸ் 3 சூப்பர்ஜூம்-ல் 4,200 எம்ஏஎச் பேட்டரி இருக்கும்
  • இந்த போன் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும்
  • ரியல்மி எக்ஸ் 3 சூப்பர்ஜூம் 30W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் வரும்

ரியல்மி எக்ஸ் 3 சூப்பர்ஜூம் சமீபத்தில் புளூடூத் எஸ்.ஐ.ஜி-ல் காணப்பட்டது.

Realme எக்ஸ் 3 சூப்பர்ஜூம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும். இந்த போன் சமீபத்தில் பல சான்றிதழ் வலைத்தளங்களில் காணப்பட்டது. அங்கிருந்து, புதிய போனின் பல்வேறு விவரங்கள் கசிந்துள்ளன. போனில் புளூடூத் 5.1 இணைப்புடன் ஸ்னாப்டிராகன் 855+ சிப்செட் இருக்கும்.

அண்மையில் அம்வோரில் ரியல்மி எக்ஸ் 3 சூப்பர்ஜூமின் பல விவரங்களை சுதான்ஷு வெளியிட்டுள்ளார். அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு, இந்த நபர் வெவ்வேறு ஸ்மார்ட்போன்களின் விவரங்களை துல்லியமாக தெரிவித்தார். ரியல்மி எக்ஸ் 3 சூப்பர்ஜூமில் 30W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் 4,200 எம்ஏஎச் பேட்டரி இருக்கும் என்று சுதான்ஷு கூறினார். இந்த போனில் ஸ்னாப்டிராகன் 855+ சிப்செட் இருக்கும் என்று அவர் மேலும் கூறினார். போனின் விலை சுமார் ரூ.20,000-க்கு மேல் இருக்கும் என்றும் கூறினார்.

Realme X3 சூப்பர்ஜூமின் பின்புறத்தில் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா இருக்கும் என்பது சீனாவின் டெனா சான்றிதழ் வலைத்தளத்திலிருந்து சமீபத்தில் தெரியவந்தது. மேலும், 8 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் இரண்டு 2 மெகாபிக்சல் கேமராக்களுடன் வரும். சீன நிறுவனம் புதிய போனில் 6.57 அங்குல FHD + AMOLED டிஸ்ப்ளேவை வழங்குகிறது. இதில் ஒரு ஹோல்-பஞ்ச் டிஸ்ப்ளே உள்ளது. இந்த போன் ஆண்ட்ராய்டு 10-ல் இயங்கும்.

இந்த போனில் பெரிஸ்கோப் லென்ஸ் இருக்கலாம். புதிய போனைப் பற்றி ரியல்மி இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.


Is iPhone SE the ultimate 'affordable' iPhone for India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. மொபைல்ல இல்ல, காருக்குள்ள ரே-டிரேசிங்! Dimensity P1 Ultra சிப்செட் – காருக்கான AI சக்தியை கொண்டுவந்த MediaTek
  2. 200MP, 7000mAh பேட்டரி... இனி சார்ஜ் பண்ற கவலையே இல்லை! Realme 16 Pro-வோட மிரட்டலான ஸ்பெக்ஸ் லீக்
  3. Phone 3 யூசர்களுக்கு தீபாவளி ட்ரீட்! Nothing OS 4.0 ஸ்டேபிள் அப்டேட் ரிலீஸ்—கிட்டத்தட்ட 8 புது வசதிகள்
  4. 8000mAh பேட்டரி கொண்ட OnePlus போனா? Ace 6T மாடலின் அசத்தல் வண்ணங்கள் ரிலீஸுக்கு முன்னாடியே வெளியீடு
  5. Oppo K15 Turbo Pro: Snapdragon 8 Gen 5, 8000mAh பேட்டரி லீக்.
  6. ஸ்மார்ட் வாட்ச் வாங்க போறீங்களா? OnePlus-ன் 'New Watch' டீஸர்! 5800 ரூபாய் டிஸ்கவுன்ட்
  7. iQOO 15: Pre-Booking இன்று துவக்கம்; 7000mAh Battery உடன் நவம்பர் 26 அறிமுகம்
  8. இந்தியாவின் புது கிங்! Lava Agni 4 லான்ச்! ₹22,999-க்கு இந்த போனை வாங்கலாமா?
  9. Wobble One: Dimensity 7400, 120Hz AMOLED Display உடன் ரூ.22,000-க்கு அறிமுகம்
  10. Vivo-ன் போட்டோகிராபி கிங்! X300 Pro-க்கு ₹1,09,999 விலையா? விலை ஏறுனதுக்கு என்ன காரணம்?
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.