Photo Credit: Twitter/ Realme Europe
Realme X3 SuperZoom ஸ்மார்ட்போன் மே 26 அன்று அறிமுகமாகவுள்ளது. இந்த போனில், ஸ்னாப்டிராகன் 855+ செயலி மற்றும் 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே பொருத்தப்படும் என்று தெரிய வந்துள்ளது. ரியல்மி எக்ஸ் 3 சூப்பர்ஜூம் ஸ்மார்ட்போன் தொடர்பாக ஐரோப்பிய ட்விட்டர் பக்கத்தில் நிறுவனம் சில போஸ்டர்களை பகிர்ந்துள்ளது. இதில் மேற்கூறிய விவரக்குறிப்பு பற்றிய தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இது தவிர, ஒரு வீடியோவும் ஸ்மார்ட்போனின் வடிவமைப்பை வெளிப்படுத்துகிறது. இந்த போன் தொடர்பான பல கசிவுகள் மற்றும் டீஸர்கள் இதற்கு முன்னர் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், இப்போது நிறுவனம் அதன் சில தகவல்களை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு வெளியிட்டுள்ளது.
ரியல்மி ஐரோப்பா ட்விட்டரில் பகிர்ந்த ஒரு போஸ்டரில், ஸ்னாப்டிராகன் 855+ செயலியுடன் AnTuTu பெஞ்ச்மார்க் மதிப்பெண் 517,743 இருப்பதைக் காட்டியது. ரியல்மி எக்ஸ் 3 சூப்பர்ஜூமின் இரண்டாவது போஸ்டர் எல்சிடி திரையின் புதுப்பிப்பு வீதத்தை வெளிப்படுத்தியுள்ளது. இது 120 ஹெர்ட்ஸ் ஆகும்.
இந்த போஸ்டர்களைத் தவிர, ஒரு குறுகிய டீஸர் வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில், போனின் இரட்டை முன் கேமரா, குவாட் ரியர் கேமரா அமைப்பு மற்றும் பச்சை மற்றும் வெள்ளை ஆகிய இரண்டு வண்ணங்களில் காணப்படுகின்றன. இது தவிர, பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனரும் இதில் உள்ளது.
இது தவிர, டி.டபிள்யூ.எஸ் இயர்போன்களை அறிமுகம் செய்வது குறித்தும் நிறுவனம் தெரிவித்துள்ளது. ரியல்மி இந்தியாவில் ரியல்மி பட்ஸ் ஏர் நியோவை ரூ.2,999 க்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
Realme எக்ஸ் 3 சூப்பர்ஜூம் ஸ்மார்ட்போனின் டிஜிட்டல் வெளியீட்டு நிகழ்வு மே 26 ஆம் தேதி இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும். வெளியீட்டு நிகழ்வு நிறுவனத்தின் சமூக ஊடக சேனல்களான ட்விட்டர், பேஸ்புக், யூடியூப் மற்றும் Realme.com-ல் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்