ரியல்mi எக்ஸ் 3 சூப்பர்ஜூம் ரூ.20,000-க்கு மேல் இருக்கும்.
ரியல்மி எக்ஸ் 3 சூப்பர்ஜூம் சமீபத்தில் புளூடூத் எஸ்.ஐ.ஜி-ல் காணப்பட்டது.
Realme எக்ஸ் 3 சூப்பர்ஜூம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும். இந்த போன் சமீபத்தில் பல சான்றிதழ் வலைத்தளங்களில் காணப்பட்டது. அங்கிருந்து, புதிய போனின் பல்வேறு விவரங்கள் கசிந்துள்ளன. போனில் புளூடூத் 5.1 இணைப்புடன் ஸ்னாப்டிராகன் 855+ சிப்செட் இருக்கும்.
அண்மையில் அம்வோரில் ரியல்மி எக்ஸ் 3 சூப்பர்ஜூமின் பல விவரங்களை சுதான்ஷு வெளியிட்டுள்ளார். அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு, இந்த நபர் வெவ்வேறு ஸ்மார்ட்போன்களின் விவரங்களை துல்லியமாக தெரிவித்தார். ரியல்மி எக்ஸ் 3 சூப்பர்ஜூமில் 30W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் 4,200 எம்ஏஎச் பேட்டரி இருக்கும் என்று சுதான்ஷு கூறினார். இந்த போனில் ஸ்னாப்டிராகன் 855+ சிப்செட் இருக்கும் என்று அவர் மேலும் கூறினார். போனின் விலை சுமார் ரூ.20,000-க்கு மேல் இருக்கும் என்றும் கூறினார்.
Realme X3 சூப்பர்ஜூமின் பின்புறத்தில் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா இருக்கும் என்பது சீனாவின் டெனா சான்றிதழ் வலைத்தளத்திலிருந்து சமீபத்தில் தெரியவந்தது. மேலும், 8 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் இரண்டு 2 மெகாபிக்சல் கேமராக்களுடன் வரும். சீன நிறுவனம் புதிய போனில் 6.57 அங்குல FHD + AMOLED டிஸ்ப்ளேவை வழங்குகிறது. இதில் ஒரு ஹோல்-பஞ்ச் டிஸ்ப்ளே உள்ளது. இந்த போன் ஆண்ட்ராய்டு 10-ல் இயங்கும்.
இந்த போனில் பெரிஸ்கோப் லென்ஸ் இருக்கலாம். புதிய போனைப் பற்றி ரியல்மி இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
Is iPhone SE the ultimate 'affordable' iPhone for India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999