Realme X2 Pro இன்று இந்தியாவில் தனது "Blind Order" விற்பனைக்கு சென்றுள்ளது. ரியல்மே இந்தியா வலைத்தளம் மூலம் நடைபெற்று வரும் இந்த விற்பனை வாடிக்கையாளர்களுக்கு Realme X2 Pro-வை முன்பதிவு செய்வதற்கான வாய்ப்பை வழங்கும். மேலும், இது நவம்பர் 20 புதன்கிழமை திட்டமிடப்பட்டுள்ள Realme X2 Pro-வை முறையாக அறிமுகப்படுத்துவதற்கு முன்னதாகவே நடைபெறுகிறது. புதிய ரியல்மே ஸ்மார்ட்போன் Redmi K20 Pro மற்றும் OnePlus 7T போன்றவற்றை அதன் உயர்நிலை விவரக்குறிப்புகளுடன் எடுக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. அவற்றில் octa-core Qualcomm Snapdragon855+ SoC மற்றும் 12 ஜிபி ரேம் ஆகியவை அடங்கும்.
ரியல்மே இந்தியா இணையதளத்தில் உள்ள பட்டியலின்படி, பிளைண்ட் ஆர்டர் விற்பனை முதல் 855 வாடிக்கையாளர்களுக்கு Realme X2 Pro -வை முன்கூட்டியே வாங்குவதற்கான வாய்ப்பை வழங்கும். வாடிக்கையாளர்கள் ரூ. 1,000 வைப்புத்தொகையாகவும், மீதமுள்ள தொகை நவம்பர் 20 முதல் 21 வரை செலுத்தப்படும் - இது நாட்டில் Realme X2 Pro அறிமுகத்தைத் தொடர்ந்து வரக்கூடும். நிலுவைத் தொகை அழிக்கப்பட்ட பின்னர், அது ஆர்டரை அனுப்பும் என்றும் நிறுவனம் குறிப்பிடுகிறது. இதன் விற்பனை இப்போது உள்ளது.
இந்தியாவில் Realme X2 Pro-வின் விலை (எதிர்பார்க்கப்படுபவை):
நினைவுகூர, Realme X2 Pro-வின் 6 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜின் விலை CNY 2,699 (சுமார் ரூ .27,600)-யாக கடந்த மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதே நேரத்தில் அதன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் CNY 2,899 ( சுமார் ரூ .29,600) மற்றும் டாப்-ஆஃப்-லைன் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டிற்கு CNY 3,299 (சுமார் ரூ. 33,700) விலைக் குறியைக் கொண்டுள்ளது. ஸ்மார்ட்போனின் இந்தியா விலை அதன் சீனா விலைக்கு ஏற்ப இருக்கக்கூடும். இந்தியா விலைகளை நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை.
ஆரம்பகால டீஸர்களைப் பார்த்தால், Realme X2 Pro அதன் அதிகாரப்பூர்வமாக அறிமுகமானவுடன், ரியல்மே இந்தியா வலைத்தளம் மற்றும் பிளிப்கார்ட் மற்றும் பல ஆஃப்லைன் கடைகள் மூலம் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Realme X2 Pro-வின் விவரக்குறிப்புகள்:
டூயல்-சிம் (நானோ) Realme X2 Pro, ColorOS 6.1 உடன் Android 9 Pie-யால் இயங்குகிறது. 20:9 aspect ratio மற்றும் 90Hz refresh rate உடன் 6.5-inch full-HD+ (1080x2400 pixels) Super AMOLED Fluid டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. ஹூட்டின் படி, இந்த போன் 2GB of LPDDR4X RAM வரை இணைக்கப்பட்டு octa-core Qualcomm Snapdragon 855+ SoC-யால் இயக்கப்படுகிறது.
புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு, Realme X2 Pro, quad rear கேமரா அமைப்பில் six-piece, f/1.8 lens உடன் 64-megapixel Samsung GW1 முதன்மை சென்சாரைக் கொண்டுள்ளது. கேமரா அமைப்பில் f/2.5 telephoto lens உடன் 13-megapixel இரண்டாம் நிலை சென்சார், 15-degree ultra-wide-angle lens, f/2.2 aperture உடன் 8-megapixel மூன்றாம் நிலை சென்சார் மற்றும் 2-megapixel depth சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில் f/2.0 lens உடன் 16-megapixel Sony IMX471 செல்ஃபி கேமரா சென்சார் உள்ளது.
Realme X2 Pro 64GB (டூயல்-சேனல் UFS 2.1), 128GB (UFS 3.0) மற்றும் 256GB (UFS 3.0) ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது. பொனின் இணைப்பு விருப்பங்களில் 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, NFC, USB Type-C மற்றும் 3.5mm headphone jack ஆகியவை அடங்கும்.ஆன்போர்டு சென்சார்களில் accelerometer, ambient light, gyroscope, magnetometer மற்றும் proximity சென்சார் ஆகியவை அடங்கும். தவிர, இந்த போன் வேகமான சார்ஜிங்கிற்காக, 50W SuperVOOC Flash Charge தொழில்நுட்பத்துடன் 4,000mAh பேட்டரியை பேக் செய்கிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்