Realme P4x 5G ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி மற்றும் மூன்று வேரியன்ட்களின் விலை விவரங்கள் லீக் ஆகியுள்ளன
Photo Credit: Realme
Realme P4x 5G ஸ்மார்ட்போனில் AI- அடிப்படையிலான 50-மெகாபிக்சல் பின்புற கேமரா யூனிட் இருக்கும்
நம்ம Realme கம்பெனி சமீபகாலமா பட்ஜெட் செக்மென்ட்ல பண்ற வேட்டை இருக்கே, அது வேற லெவல்! இப்போ அவங்க டிசம்பர் 4-ஆம் தேதி இந்தியால லான்ச் பண்ணப் போற Realme P4x 5G போனை பத்தின விலை டீடெயில்ஸ் எல்லாம் கசிஞ்சிடுச்சு! இந்த லீக் ஆன விலையைப் பார்த்தா, ₹20,000-க்குள்ள ஒரு தரமான கேமிங் பவர்ஹவுஸ் வருதுன்னு சொல்லலாம்!இந்த Realme P4x 5G போன் டிசம்பர் 4, 2025 அன்று மதியம் 12 மணிக்கு இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகிறது. லான்ச்சுக்கு முன்னாடியே, நம்பகமான டிப்ஸ்டர்கள் மூலம் இதோட விலை விவரங்கள் இணையத்துல லீக் ஆகியிருக்கு.
இந்த விலைகள் உண்மையா இருந்தா, இந்த செக்மென்ட்ல இருக்க மத்த போன்களுக்கு இது ஒரு மாஸ் போட்டி கொடுக்கும்!
சரி, இந்த போன்ல என்னென்ன முக்கியமான ஸ்பெக்ஸ் இருக்குன்னு பார்க்கலாம்.
முதல்ல, இந்த போன்ல 7,000mAh மெகா சைஸ் பேட்டரி இருக்குன்னு கம்பெனியே உறுதிப்படுத்திடுச்சு. கூடவே, இந்த பேட்டரியை சார்ஜ் பண்ண 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்டும் இருக்கு. இவ்வளவு பெரிய பேட்டரி இருந்தா, கேமிங் செஷன்ஸ் எல்லாம் லாங் லாஸ்டிங்கா இருக்கும்னு சொல்லலாம்!
அடுத்ததா, பெர்ஃபார்மன்ஸ்! இதுல MediaTek Dimensity 7400 Ultra 5G சிப்செட் இருக்கு. இந்த புராசஸரோட AnTuTu ஸ்கோர் கிட்டத்தட்ட 780,000-ஐ தாண்டும்னு எதிர்பார்க்கப்படுது. இது இந்த விலை செக்மென்ட்ல ஒரு பெஸ்ட் பெர்ஃபார்மன்ஸ்-ஐ கொடுக்கும்! அதுமட்டுமில்லாம, 18GB வரை டைனமிக் RAM (Virtual RAM) சப்போர்ட்டும் இந்த போன்ல இருக்கு.
கேமிங் ஆடியன்ஸை டார்கெட் பண்ணி வர்றதால, ஹீட்டை சமாளிக்க 5300mm² VC FrostCore கூலிங் சிஸ்டம் கொடுத்திருக்காங்க. ரொம்ப நேரம் கேம் விளையாடினாலும் போன் சூடாகாம பாத்துக்கும்!
டிஸ்பிளே-வை பொறுத்தவரைக்கும், இதுல 6.72-இன்ச் Full HD+ டிஸ்பிளே இருக்கு. கேமர்களுக்கு ரொம்ப பிடிச்ச 144Hz ரெப்ரெஷ் ரேட் இருக்கிறதால, கேம்ப்ளே எல்லாம் பயங்கர ஸ்மூத்தா இருக்கும். அப்புறம், பிரைட்னஸும் 1,000 நிட்ஸ் வரைக்கும் போகுமாம்.
கேமரா பக்கம் வந்தா, பின்னாடி 50-மெகாபிக்ஸல் AI மெயின் கேமரா மற்றும் ஒரு 2-மெகாபிக்ஸல் சென்சார் இருக்கும்னு லீக் ஆகியிருக்கு. செல்ஃபி எடுக்க 8-மெகாபிக்ஸல் ஃப்ரண்ட் கேமரா இருக்கு.
மொத்தத்துல, Realme P4x 5G ஒரு பவர்ஃபுல் பேட்டரி, தரமான புராசஸர், மற்றும் சூப்பரான டிஸ்பிளேயோட ₹20,000-க்குள்ள வருதுன்னா, இது கண்டிப்பா இந்திய மார்க்கெட்ட கலக்கப் போகுது! இந்த போன் லான்ச் ஆனா வாங்குவீங்களா இல்லையான்னு கமெண்ட்ஸ்ல சொல்லுங்க.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்