Photo Credit: Realme
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். இப்போ நாம் பார்க்க இருப்பது Realme Neo 7 செல்போன் பற்றி தான்.
Realme Neo 7 டிசம்பரில் சீனாவில் அறிமுகப்படுத்தப்படுவது உறுதிசெய்யப்பட்டது. ஆனால் சரியான வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. அறிமுகத்திற்கு முன்னதாக, வரவிருக்கும் ஸ்மார்ட்போனின் விலை, உருவாக்கம் மற்றும் பேட்டரி விவரங்களை நிறுவனம் வெளியிட்டது. மீடியா டெக் டைமன்சிட்டி 9300+ சிப்செட் மற்றும் 7,000எம்ஏஎச் பேட்டரியுடன் இந்த செல்போன் வர உள்ளது. Realme Neo 7 செல்போன்கள் முறையே Realme GT Neo 6 மற்றும் GT Neo 6 SE மாடலுக்கு பின் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Realme Neo 7 விலையானது சீனாவில் தோராயமாக ரூ. 29,100 என்கிற அளவில் ஆரம்பம் ஆகிறது. Realme நிறுவனத்தின் வெய்போ பதிவில் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செல்போன் 2 மில்லியனுக்கும் அதிகமான புள்ளிகளுடன் AnTuTu பெஞ்ச்மார்க் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முந்தைய மாடல்களின் 6,500mAh பேட்டரியி விட பெரிய பேட்டரியை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்காக IP68 விட அதிக மதிப்பீட்டைக் கொண்டிருக்கும் என்று சுட்டிக்காட்டுகிறது.
Realme அதிகாரப்பூர்வ Realme China e-store மற்றும் பிற இ-காமர்ஸ் தளங்கள் வழியாக Neo 7 செல்போனுக்கான முன்பதிவு தொடங்கி உள்ளது. இந்த போன்கள் குறித்த கூடுதல் விவரங்கள் அறிமுகம் செய்யப்படுவதற்கு சில வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Realme Neo 7 ஆனது AnTuTu ஸ்கோர் 2.4 மில்லியனுக்கும் அதிகமாக இருப்பதாக முந்தைய தகவல்கள் கூறுகின்றன. இது MediaTek Dimensity 9300+ சிப்செட் மற்றும் 7,000mAh பேட்டரியைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP68 மற்றும் IP69 மதிப்பீடுகளுடன் வரலாம்.
முன்னதாக, சீனாவின் 3C சான்றிதழ் தளத்தில் ஒரு பட்டியல், Realme Neo 7 ஆனது 80W வயர்டு SuperVOOC சார்ஜிங்கிற்கான சப்போர்ட் உடன் வரும் என கூறப்பட்டிருந்தது. பெரிய 1.5K ரெசல்யூஷன் டிஸ்ப்ளே கிடைக்கும்.
தற்போதுள்ள Realme GT Neo 6 ஆனது Snapdragon 8s Gen 3 SoC, 120W சார்ஜிங் சப்போர்ட் உடன் 5,500mAh பேட்டரி மற்றும் 6.78 இன்ச் 1.5K 8T LTPO AMOLED திரையை கொண்டுள்ளது . இது சீனாவில் 12GB ரேம் + 256GB மெமரி மாடல் ரூ. 22,000 vilaiyilதொடங்குகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்