Realme Neo 8 ஸ்மார்ட்போனின் முக்கிய விவரங்கள் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளன
Photo Credit: Realme
Realme Neo 8ல் 8000mAh பேட்டரி, Snapdragon 8 Gen 5 சிப்
இன்னைக்கு Realme-ன் அடுத்த பவர்ஃபுல் மாடலான Realme Neo 8 பத்தின ஒரு மாஸ்ஸான லீக் வந்திருக்கு. இது வெறும் லீக் இல்ல, போனோட முக்கியமான ஸ்பெக்ஸ் எல்லாமே கசிஞ்சிருக்கு. இது Neo 7-ன் அடுத்த மாடலா இருக்கும்னு எதிர்பார்க்கப்படுது.இந்த போனோட ஃபர்ஸ்ட் ஹைலைட்டே, அதோட பேட்டரி தான். லீக் ஆன தகவல்படி, Realme Neo 8-ல 8,000mAh-க்கு மேல் திறன் கொண்ட Silicon-Carbon Battery கொடுக்கப்படலாம்! போன Realme Neo 7-ல 7,000mAh பேட்டரி தான் இருந்துச்சு. இப்போ 8,000mAh பேட்டரின்னா, பேட்டரி லைஃப் வேற லெவல்ல இருக்கும். இதுக்கு Fast Charging சப்போர்ட்டும் இருக்கும்.
அடுத்து, பெர்ஃபார்மன்ஸ். சிப்செட் தான் இங்க ஒரு பெரிய கேள்விக்குறி! இந்த போன்ல Qualcomm-ன் இன்னும் அறிமுகமாகாத Snapdragon 8 Gen 5 சிப்செட் இருக்கும்னு எதிர்பார்க்கப்படுது. இது உண்மையா இருந்தா, இந்த போன் பெர்ஃபார்மன்ஸ்ல ஒரு மான்ஸ்டரா இருக்கும். இந்த தகவல் Gizmochina ரிப்போர்ட் மூலம் வெளிய வந்திருக்கு.
டிஸ்பிளே-வைப் பற்றி பேசலாம். இதுல 6.78-இன்ச் LTPS Flat Display இருக்கு.
ரெசல்யூஷன் 1.5K இருக்கும்னு சொல்லியிருக்காங்க. அதுமட்டுமில்லாம, இந்த போன்ல 3D Ultrasonic Fingerprint Sensor கொடுக்கப்படலாம்னு எதிர்பார்க்கப்படுது. இது நார்மல் இன்-டிஸ்பிளே சென்சாரை விட வேகமாகவும், துல்லியமாகவும் இருக்கும்.
கேமராவைப் பொறுத்தவரை, பின்னாடி 50MP Primary Camera சென்சார் இருக்கலாம்னு லீக் ஆகியிருக்கு. மற்ற சென்சார்கள் பத்தி இன்னும் தகவல் வரலை. ஆனால், இது கேமராவிலும் ஒரு நல்ல அப்கிரேடா இருக்கும்னு நம்பலாம்.
Realme Neo 7-ன் ஸ்பெக்ஸ் பத்தி ஒரு சின்ன ரீகேப்: அதுல Dimensity 9300+ சிப்செட், 7,000mAh பேட்டரி, 80W சார்ஜிங் மற்றும் IP68+IP69 ரேட்டிங் இருந்தது. Realme Neo 8-ல் 8,000mAh Battery மற்றும் Snapdragon 8 Gen 5 வந்தா, இது மார்க்கெட்ல ஒரு பெரிய போட்டியைக் கொடுக்கும்.
இந்த Realme Neo 8 சீரிஸ் பத்தின அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வரல. ஆனா, இந்த லீக் ஆன அம்சங்கள் இந்த போன் மேல இருக்கிற எதிர்பார்ப்பை ரொம்பவே அதிகப்படுத்திருக்கு. இந்த 8000mAh Battery மற்றும் Snapdragon 8 Gen 5 காம்பினேஷன் உங்களுக்கு பிடிச்சிருக்கா? இந்த போன் இந்தியாவுல லான்ச் ஆனா, வாங்குவீங்களா? கமெண்ட்ல சொல்லுங்க
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
ISS Astronauts Celebrate Christmas in Orbit, Send Messages to Earth
Arctic Report Card Flags Fast Warming, Record Heat and New Risks
Battery Breakthrough Uses New Carbon Material to Boost Stability and Charging Speeds
Ek Deewane Ki Deewaniyat Is Streaming Now: Know Where to Watch the Romance Drama Online