Photo Credit: Xiaomi
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். இப்போ நாம் பார்க்க இருப்பதுRedmi Turbo 4 செல்போன் பற்றி தான்.
Redmi Turbo 4 ஆனது 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சீனாவிற்கு வர உள்ளது. MediaTek Dimensity 8400-Ultra சிப்செட்டுடன் அறிமுகப்படுத்தப்படும் முதல் போன் இதுவாக இருக்கும் என்று நிறுவனம் உறுதி செய்துள்ளது. மீடியாடெக் சமீபத்தில் அதன் டைமன்சிட்டி 8400 SoC ஐ அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. ரியல்மி நிறுவனமும் இனி வரும் செல்போன்களில் இந்த சிப்செட் பொருத்தப்படும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இது Realme Neo 7 SE ஆக இருக்கும் என தெரியவருகிறது. இது இந்த மாத தொடக்கத்தில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட Realme Neo 7 செல்போன் சீரியஸ் உடன் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Redmi Turbo 4 செல்போன் 2025 ஆம் ஆண்டின் முற்பகுதியில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. மீடியாடெக் டைமென்சிட்டி 8400-அல்ட்ரா SoC மூலம் இயக்கப்படும் என்று ரெட்மி வெய்போ பதிவில் உறுதிப்படுத்தியது. அந்த சிப்செட்டைப் பெற்ற முதல் போன் இது என்று கூறப்படுகிறது.
முன்பு வெளியான தகவல்கள் ரெட்மி டர்போ 4 ஜனவரி 2025க்குள் சீனாவுக்கு வரக்கூடும் என்று கூறின. இப்போது Redmi Turbo 4 செல்போன் மாடலின் வடிவமைப்பு குறித்த விவரங்கள் வெளியாகி இருக்கிறது. இது இரட்டை பின்புற கேமரா அமைப்பு மற்றும் சீரான, மிக மெலிதான பெசல்கள் கொண்ட பிளாட் டிஸ்ப்ளே ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.
Realme நிறுவனம் MediaTek Dimensity 8400 SoC மூலம் இயங்கும் செல்போனை அறிமுகப்படுத்தும் என கூறப்படுகிறது. Tipster Digital Chat Station வெளியிட்ட தகவல்படி இது Realme Neo 7 SE ஆக இருக்கலாம் என கூறப்படுகிறது. MediaTek Dimensity 8400 சிப்செட் Dimensity 8300 அமைப்பின் மேல் எட்டு Arm Cortex-A725 கோர்களுடன் வருகிறது. இதன் வேகம் 4.32GHz. இது Arm Mali-G720 GPU உடன் இணைக்கப்பட்டுள்ளது. LPDDR5x ரேம் மற்றும் UFS 4.0 மெமரியை சப்போர்ட் செய்யும் என்று கூறப்படுகிறது. ப்ராசஸரில் MediaTek NPU 880 உள்ளது, இது AI பணிகளுக்கு உதவுகிறது.
சமீபத்திய மீடியா டெக் சிப்செட்டில் உள்ளமைக்கப்பட்ட மீடியாடெக் இமேஜிக் 1080 ஐஎஸ்பி உள்ளது. இது அதிக வெளிச்சத்தைப் பிடிக்கவும், வேகமாக கவனம் செலுத்தவும் உதவும் என்று கூறப்படுகிறது. இந்த SoC கொண்ட ஸ்மார்ட்போன்கள் 320-மெகாபிக்சல் கேமரா சென்சார்கள் மற்றும் 144Hz புதுப்பிப்பு வீதத்துடன் WQHD வரையிலான டிஸ்ப்ளேக்கள் வரை சப்போர்ட் செய்யும் என்று கூறப்படுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்